GOAT Box Office: கோட் 7வது நாள் வசூல் எவ்வளவு?.. ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு படம் லாபமா? நஷ்டமா?
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் கடந்த வியாழனன்று வெளியானது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே உலகளவில் உள்ள விஜய் ரசிகர்கள் ஒரு முறைக்கு பல முறை தியேட்டருக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர்.
ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட எந்தவொரு ப்ரோமோஷனையும் படக்குழுவினர் சரியாக செய்ய முடியவில்லை என்றாலும் தளபதியின் பெயருக்காகவே ரசிகர்கள் படத்தை பார்க்க குவிந்தனர்.

முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் டிக்கெட்டே கிடைக்கவில்லை என்கிற பேச்சுக்கள் ஓடின. ஆனால், திங்கட்கிழமை முதல் புதன் கிழமை வரை வார நாட்களில் கூட்டம் குறையத் தொடங்கின. ஃபேமிலி ஆடியன்ஸ் மாலை மற்றும் இரவுக் காட்சிகளை ஹவுஸ்ஃபுல் ஆக்கி வருகின்றனர்.
டெட்பூல் படம் மாதிரி: இயக்குநர் வெங்கட் பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் கோட் படத்தில் ஏன் இத்தனை கேமியோக்கள் என்கிற கேள்விக்கு ஹாலிவுட்டில் மார்வெல் படங்கள் வந்தாலே கொண்டாட்டமான படமாகத்தான் இருக்கும். சமீபத்தில் வெளியான டெட்பூல் திரைப்படம் கூட அதே வகையறாத்தான். அது மாதிரி தமிழில் படங்கள் வருவது கிடையாது. அப்படியொரு படமாக தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடுவதற்கான படமாக கோட் படத்தை கொடுக்க நினைத்தேன், கொடுத்திருக்கிறேன் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
விமர்சனங்களும் ட்ரோல்களும்: பெரிய படங்கள் என்றாலே விமர்சனங்களும் ட்ரோல்களும் வருவது சகஜம் தான் என்றும் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருப்பதால் அவர் மீதான தாக்குதல் அதிகமாகவே இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெற்ற சிஎஸ்கே காட்சிகள் தான் மற்ற ஏரியாக்களில் படம் சேல்ஸ் ஆகாததற்கு காரணம் என வெங்கட் பிரபுவும் கூறியுள்ளார்.
7வது நாள் வசூல்: செப்டம்பர் 5ம் தேதி கடந்த வியாழக் கிழமை வெளியான விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் 7 நாட்களில் உலகளவில் 350 கோடி முதல் 360 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை வெள்ளிக்கிழமை தமிழில் எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், இந்த வாரமும் விஜய் படத்துக்கு கூட்டம் வரும் என்றும் அதிகபட்சமாக 500 கோடி வசூலை கோட் படம் அள்ளும் எனக் கூறுகின்றனர்.
லாபமா? நஷ்டமா?: பிகில் படத்தை தொடர்ந்து விஜய்யை வைத்து ஏஜிஎஸ் தயாரித்துள்ள படம் தான் கோட். பிகில் படம் 180 கோடியில் எடுக்கப்பட்டு 300 கோடி வரை வசூல் ஈட்டியது. அதே போல இந்த படம் 400 கோடியில் எடுக்கப்பட்டு 500 கோடி வரை வசூல் செய்தாலே லாபம் தான் எனக் கூறுகின்றனர். ஓடிடி உரிமம் 120 கோடிக்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும் சாட்டிலைட் உரிமத்தை ஜீ நெட்வொர்க் 90 கோடிக்கு வாங்கியிருப்பதாகவும் ஆடியோ ரைட்ஸ் 20 முதல் 25 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் தயாரிப்பு நிறுவனத்திற்கு படம் லாபம் தான் என்கின்றனர்.
இந்த ஆண்டு இதுவரையில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூலை ஈட்டிய படமாக கோட் உள்ளது. கோட் படத்தின் வசூல் சாதனையை வேட்டையன் மற்றும் கங்குவா முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications











