GOAT Box Office: தமிழ்நாட்டில் தளபதி கெத்து.. 2வது முறையாக அந்த வசூல் சாதனையை படைத்த ‘கோட்’ விஜய்!

சென்னை: கோட் படம் தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூல் வேட்டையை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லியோ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டில் இப்படியொரு சாதனையை விஜய் செய்து கெத்துக் காட்டியுள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 5ம் தேதி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

இதுவரை கோட் திரைப்படம் 450 கோடி ரூபாய் வ்சூலை நெருங்கியுள்ளதாக கூறுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடி என்கிற மைல்கல்லை கோட் படம் எட்டியிருப்பதாக வெளியான தகவல்களால் தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துள்ளனர்.

goat goat box office vijay

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான மட்ட பாடலின் வீடியோவும் இன்று வெளியாகி விஜய் மற்றும் த்ரிஷா ரசிகர்களை உச்சகட்ட சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை 3 படங்கள் மட்டுமே: தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் வசூல் என்கிற இமாலய சாதனையை இதுவரை 3 படங்கள் மட்டுமே பண்ணியிருப்பதாக கூறுகின்றனர். பொன்னியின் செல்வன், லியோ மற்றும் கோட் உள்ளிட்ட படங்கள் தான் இப்படியொரு சாதனையை நிகழ்த்தியுள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கூட 200 கோடி ரூபாய் வசூலை தமிழ்நாட்டில் கலெக்ட் செய்யவில்லை என்கின்றனர்.

2 விஜய் படங்கள்: அதிலும், தளபதி விஜய்யின் லியோ மற்றும் கோட் என அடுத்தடுத்து 2 படங்கள் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடி வசூலை அள்ளியிருப்பதாக கூறுகின்றனர். தமிழ்நாட்டின் வசூலையே தளபதி விஜய்யின் சம்பளமாக வாங்கி வருகிறார் என்றும் ஓவர்சீஸ் வசூல் மற்றும் மற்ற மாநில வசூல் தான் தயாரிப்பு நிறுவனத்துக்கு என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தளபதி 69 வசூல் எப்படி இருக்கும்?: கோட் படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மட்டுமே 200 கோடியை எட்டியுள்ள நிலையில், தளபதி 69 படத்தின் தமிழ்நாட்டு வசூல் மட்டும் 275 கோடி முதல் 300 கோடி வரை வர வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். உலகம் முழுவதும் அந்த படம் 700 கோடி முதல் 800 கோடி ரூபாயை எட்ட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆனால், எச். வினோத் இயக்கத்தில் படம் தரமான சம்பவமாக வந்தால் மட்டுமே மிகப்பெரிய வசூல் வேட்டையை படம் செய்யும் என்றும் கூறுகின்றனர். இல்லை என்றால் வெங்கட் பிரபு கிண்டி கொடுத்த மல்டி ஸ்டாரர் மிக்சர் மசாலா கோட் போல 500 கோடி வசூலை அள்ளவே அந்த படம் தத்தளிக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை தான் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X