GOAT vs GBU Box Office: டிரைலரில் விஜய்யை ஓரம் கட்டிய அஜித்.. வசூலில் என்ன ஆச்சு? இதோ கம்பேரிஷன்!

சென்னை: குட் பேட் அக்லி அஜித்திற்கு மட்டும் இல்லாமல், தமிழ் சினிமாவுக்கு ஒரு டிரெண்ட் செட்டிங் படமாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. காரணம், அடுத்தடுத்து தோல்வி படங்களைக் கொடுக்கும் மாஸ் நடிகர்கள் தனது முந்தைய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை ரெஃபரன்ஸாக வைத்து தரமான ஆக்‌ஷன் படத்தைக் கொடுத்தால் அது மாஸ் ஹிட் அடிக்கும் என்பதற்கு குட் பேட் அக்லி ஒரு எடுத்துக் காட்டு.

இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்துள்ளது. மேலும் அஜித் போன்ற நடிகர் இந்த படத்தின் மூலம் கம் பேக் கொடுத்துள்ளார் என்றுதான் கூறவேண்டும். ரசிகர்கள் அஜித்தை எந்த அளவுக்கு கொண்டாட நினைத்தார்களோ அதைவிட ஒரு படி மேலே சென்று கொண்டாட வைக்கும் அளவுக்கு ஆதிக் இந்த படத்தை எடுத்துள்ளார் என ரசிகர்கள் ஆதிக்கை பாராட்டி வருகிறார்கள்.

Vijay S GOAT Day 1 Box Office Collection vs Ajith Kumar Good Bad Ugly Box Office Comparison

அஜித்தின் முந்தைய படமான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக பெரிய தோல்விப் படமாக அமைந்தது. அதற்கு காரணம் அஜித்திற்கு மாஸ் காட்சிகள் என எதுவுமே இல்லை என்ற குற்றச்சாட்டை ரசிகர்கள் முன் வைத்தார்கள். அந்த குற்றச்சாட்டு, ஏமாற்றத்திற்கு எல்லாம் பதில் அளிக்கும் வகையில் குட் பேட் அக்லி படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் டிரைலர், டீசர் ஆகியவை யூடியூப் தளத்தில் சாதனை படைத்தது.

Vijay S GOAT Day 1 Box Office Collection vs Ajith Kumar Good Bad Ugly Box Office Comparison

சாதனை: அதாவது டீசர் மற்றும் டிரைலர் என இரண்டுமே 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இதற்கு முன்னர் இந்த சாதனை விஜய் படங்களுக்குத்தான் இருந்தது. அதாவது விஜய்யின் லியோ படத்தின் டிரைலர் தான் யூடியூப் தளத்தில் அதிகமானோர் பார்த்திருந்தார்கள். ஆனால் இப்போது டிரைலர் மற்றும் டீசர் ரெகார்டில் யார் முதல் இடத்தில் உள்ளார் என்றால் அது அஜித் குமார் தான். அதுவும் குட் பேட் அக்லி படம்தான்.

Vijay S GOAT Day 1 Box Office Collection vs Ajith Kumar Good Bad Ugly Box Office Comparison

கோட்: இப்படி இருக்கும்போது, குட் பேட் அக்லி படத்தின் முதல் நாள் வசூலும் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் படத்தின் முதல் வசூலை விட கூடுதலாக வசூல் செய்ததா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. கோட் படத்தை பொறுத்தவரையில் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 126.32 கோடிகள் வசூல் செய்தது. இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் குட் பேட் அக்லி படம் கோட் படத்தின் வசூலை விட கூடுதலாக வசூல் செய்ததா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

Vijay S GOAT Day 1 Box Office Collection vs Ajith Kumar Good Bad Ugly Box Office Comparison

வசூல்: கோட் படம் வெளியாகும்போது அண்டை மாநிலங்களில் பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகவில்லை. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்தும் கணிசமான அளவு முதல் நாள் வசூலில் இருந்தது. மேலும் கோட் படத்திற்கு அண்டை மாநிலங்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் குட் பேட் அக்லி படத்திற்கு முதல் காட்சியே காலை 9 மணிக்குத்தான் அனைத்து மாநிலங்களிலும் திரையிடப்பட்டது. இதுவும் வசூலில் எதிரொலிக்கும். ஆனால், வெளிநாடுகளில் குட் பேட் அக்லி படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டால், கோட் படத்தை விட குட் பேட் அக்லி படம் அதிகமாக வசூல் செய்ததா என்பது குறித்து தெளிவாகத் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X