GOAT Box Office Prediction: தட்டித் தூக்குமா விஜய்யின் கோட்?.. முதல் நாள் வசூல் கணிப்பு இதோ!
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், யோகி பாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியாகிறது.
செப்டம்பர் 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு விஜய்யின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஏகப்பட்ட திரையரங்குகளில் தொடங்கி வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை ஹவுஸ்ஃபுல் ஆகி வருகின்றன.

கோட் படத்திற்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு சத்யம் உள்ளிட்ட திரையரங்குகளுக்கு வெளியேவும் ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் காட்சிகளும் டிரெண்டாகி வருகின்றன. இந்நிலையில், கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எப்படி இருக்கும் என்கிற கணிப்புகள் வெளியாகி உள்ளன.
ப்ரீ சேல்: ஏஜிஎஸ் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கான டிக்கெட் முன் பதிவு தொடங்கப்பட்ட நிலையில், இதுவரை ப்ரீ சேல்ஸ் வசூல் மட்டுமே 25 கோடி ரூபாயை கடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் அதிகபட்சமாக 75 கோடி ரூபாய் வசூலை கோட் திரைப்படம் முன்பதிவு மூலமாகவே பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் நாள் வசூல் கணிப்பு: தமிழ்நாட்டில் விஜய்யின் கோட் படத்துடன் இந்த வாரம் பெரிதாக எந்தவொரு படங்களும் வெளியாகவில்லை. அதிக திரையரங்குகள் கோட் படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், முதல் நாள் வசூல் 35 கோடி முதல் 36 கோடி வரை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதும், 50 கோடி வசூலை முதல் நாளில் கோட் திரைப்படம் நெருங்கும் என்றும் கூறுகின்றனர்.
100 கோடி கிளப்: தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் முதல் நாளே உலகளவில் 100 கோடி கிளப்பில் இணையும் எனக் கூறுகின்றனர். லியோ படம் அளவுக்கு வசூல் செய்ய வாய்ப்பில்லை என்றாலும், மினிமம் கியாரண்டியாக 100 கோடி வசூலை முதல் நாளில் கோட் திரைப்படம் அள்ளும் என்றே பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

4 நாட்களும் ஹவுஸ்ஃபுல்: லியோ படம் 100 நாட்கள் ஓடினால் வரக்கூடிய வசூலை 6 நாட்களில் எடுத்திருந்ததாக திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதே அளவுக்கு வசூல் வேட்டையை விஜய்யின் கோட் திரைப்படமும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 400 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள கோட் திரைப்படத்தின் முதல் 4 நாட்களுக்கான காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் ஆகி வரும் நிலையில், தினமும் 100 கோடி டார்கெட்டை அடித்தால் படம் மிகப்பெரிய லாபத்தை குவிக்கும் என்றே கூறுகின்றனர்.
கொண்டாட்ட மூடில் ரசிகர்கள்: தளபதி 69 படத்துடன் விஜய் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில், இந்த படத்தை விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் மிகப்பெரிய கொண்டாட்டமாக கொண்டாட காத்திருக்கின்றனர். 2 வாரங்களுக்கு ஹவுஸ்ஃபுல்லாக படம் ஓடினாலே பெத்த லாபம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தாண்டி ஓடிடி, சாட்டிலைட், ஆடியோ உரிமம் என பல வழிகளில் கோட் படத்திற்கான பிசினஸ் நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











