GOAT Box Office Day 4: கோட் 4 நாட்களில் வசூலில் மிரட்டியதா? உருட்டியதா?.. வார நாட்களில் ஓடுமா?

சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் மக்கள் மத்தியில் குவிந்து வருவதால் முதல் 4 நாட்களும் படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி மற்ற ஏரியாக்களிலும் அதிகளவில் ஹவுஸ்ஃபுல்லாகவே ஓடியது.

தளபதி விஜய்யின் 68வது படமாக வெளியான கோட் திரைப்படத்தில் ஏகப்பட்ட முன்னணி நடிகர்களும் அதை விட அதிகமாக கேமியோக்களும் இடம்பெற்று கடைசி வரை ரசிகர்களுக்கு தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் படமாக மாறிய நிலையில், ரசிகர்கள் தியேட்டரில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

goat vijay box office

கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி அடுத்தடுத்த நாட்களின் வசூல் விபரத்தை சொல்லாமல் அப்படியே சைலன்ட் மோடில் இருப்பது ஏன் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

4 நாள் ஹவுஸ்ஃபுல்: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏஐ கேமியோ, த்ரிஷாவின் குத்தாட்ட கேமியோ, சிவகார்த்திகேயனின் எதிர்கால கோலிவுட்டின் நம்பிக்கை நட்சத்திரம் குறியீடு, சிஎஸ்கே போட்டியில் தோனி விளையாடுவது என ஏகப்பட்ட கேமியோக்களும், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரின் ரெஃபரன்ஸ் என வைத்து அனைத்து ரசிகர்களையும் வெங்கட் பிரபு தியேட்டருக்கு வரவைத்த நிலையில், 4 நாட்கள் படம் ஹவுஸ்ஃபுல்லாக ஓடியது.

விமர்சனங்களை கடந்து: விஜய் நடித்துள்ள கோட் படத்தின் கதை விஜயகாந்த் நடித்த ராஜதுரை கதை என்றும் ஜெமினி மேன் படத்தை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து எடுத்து விட்டார் வெங்கட் பிரபு என்றும் கடைசி கிளைமேக்ஸில் சிஎஸ்கே போட்டியில் வரும் சண்டைக் காட்சிகளின் சிஜி சரியாக இல்லை என ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தாலும் அதையெல்லாம் தாண்டி ரசிகர்கள் படத்தை தியேட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

4வது நாள் வசூல்: கடந்த வியாழக்கிழமை செப்டம்பர் 5ம் தேதி வெளியான தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒட்டுமொத்தமாக வசூல் வேட்டை நடத்தியுள்ளது. 4வது நாளான நேற்று கூட தமிழ்நாட்டில் 30 கோடிக்கும் அதிகமான வசூலை விஜய்யின் கோட் படம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியில் 2.3 கோடி ரூபாயும் தெலுங்கில் 1.7 கோடி ரூபாயும் இந்த படம் வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் கணிப்புகள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்தமாக 4வது நாளிலும் இந்தியாவில் 35 கோடிக்கு மேல் இந்த படம் வசூல் செய்துள்ளது.

goat vijay box office

300 கோடி கிளப்: கோட் திரைப்படம் முதல் நாளில் அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், 4 நாட்களில் 300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி 300 கோடி கிளப்பில் அந்த படம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வார நாட்களில் ஓடுமா?: தமிழில் இந்த வாரமும் பெரிய படங்கள் ஏதும் இல்லாத நிலையில், இந்த வாரமும் விஜய்யின் கோட் திரைப்படம் ஓடும் என்றும் கோட் படம் பார்க்க டிக்கெட் கிடைக்காமல் காத்திருக்கும் மக்கள் இன்று முதல் படத்தை பார்க்க ஆரம்பிப்பார்கள் என்றும் அதிகபட்சம் கோட் திரைப்படம் 500 கோடி வசூலை நெருங்க வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X