Amaran: கோட் 100 கோடி ஷேர்.. சிவகார்த்திகேயனின் அமரன் படம் தமிழ்நாட்டில் எவ்வளவு ஷேர் தெரியுமா?
சென்னை: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ஷேர் பெற்ற நிலையில், அதை அர்ச்சனா கல்பாத்தி மற்றும் ராகுல் இருவரும் விஜய்யுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ வெளியானது. கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
ஒட்டுமொத்தமாக கோட் திரைப்படம் 500 கோடி வசூலை எட்டியிருக்கும் என தளபதி ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால், கோட் படத்திற்கு இதுவரை வெற்றி விழாவையே படக்குழு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோட் படத்தில் கேமியோவாக நடித்த சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளியான அமரன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி முதல் 120 கோடி வரை வசூல் வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிக்ஸர் அடித்த சிவகார்த்திகேயன்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் சிறப்பான பின்னணி இசையை அமைத்து இருந்தார். தீபாவளிக்கு வெளியான ப்ளடி பெக்கர் மற்றும் பிரதர் படங்கள் தோல்வியை தழுவிய நிலையில், அமரன் திரைப்படம் மற்றும் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் உள்ளிட்ட படங்கள் தான் வசூல் வேட்டை ஆடி வருகின்றன. தமிழ்நாட்டில் சிவகார்த்திகேயன் தான் சிக்ஸர் அடித்துள்ளார்.
அமரன் வசூல்: சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக அமரன் படத்தில் தனது உடல் தோற்றத்தை ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றி நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். கிளைமேக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் செத்து விடும் சீன்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் அதை ஏற்பார்களா என்கிற பயத்தை எல்லாம் தாண்டி மேஜர் முகுந்திற்கு சரியான சமர்ப்பணமாக கொடுக்க வேண்டும் என எடுத்த இந்த படம் 7 நாட்களில் 180 கோடி வசூலை உலகளவில் கடந்துள்ளது. இந்த வார இறுதியில் 200 கோடிக்கும் அதிகமான வசூலை அமரன் ஈட்டும் என்பது உறுதியாக தெரிகிறது.
தமிழ்நாட்டு ஷேர்: தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் ஷேர் கொடுத்த நிலையில், விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் எனக் கொண்டாடினர். சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 120 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த படத்தின் ஷேர் மட்டும் 50 முதல் 60 கோடி வரை வரும் என்கின்றனர்.
50 கோடி சம்பளம்: அமரன் படத்துக்கு சிவகார்த்திகேயனுக்கு 20 கோடி தான் சம்பளம் வழங்கப்பட்டது என தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ் வாங்குவதை போல 50 கோடி ரூபாய் சம்பளத்தை சிவகார்த்திகேயன் சீக்கிரமே வாங்குவார் என்றும் தயாரிப்பாளர்களே சிவகார்த்திகேயனுக்கு 50 கோடி சம்பளத்தை அள்ளிக் கொடுக்க ரெடியாகி விட்டனர் என்கின்றனர். ஏ.ஆர். முருகதாஸ், சிபி சக்கரவர்த்தி என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் லைன் அப் செம மாஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











