GOAT: விசில் போட ரெடியான விஜய்.. ‘கோட்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் எத்தனை மணிக்கு வருது தெரியுமா?
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'கோட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'விசில் போடு' என்கிற டைட்டிலில் வெளியாகப் போவதாக நடிகர் விஜய் தற்போது அறிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் மதன் கார்கி வரிகளில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று மாலை வெளியாகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிரமான ரசிகர் வெங்கட் பிரபு என்பதை முதல் சிங்கிளிலேயே நிரூபித்து விட்டாரே என ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை புதிய ஸ்டில்லுடன் நடிகர் விஜய் ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களுக்கு இப்பவே தமிழ் புத்தாண்டு ட்ரீட் கொடுத்தது போல உள்ளது.
கோட் ஃபர்ஸ்ட் சிங்கிள்: நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக கோட் என அழைக்கப்படும் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. அதை முன்னிட்டு தமிழ் புத்தாண்டு தினமான இன்று மாலை கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என நேற்றே அப்டேட் வெளியான நிலையில், தற்போது விஜய் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் ஃபர்ஸ்ட் லுக் டைட்டிலை வெளியிட்டுள்ளார்.
விசில் போடு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரிய விசில் அடிங்க என ஐபிஎல் சீசனில் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை அணியையும் தல தோனியையும் கொண்டாடி வரும் நிலையில், அந்த டிரெண்டை அப்படியே பயன்படுத்தி இன்று மாலை "விசில் போடு' என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிளையே கோட் படத்தில் இருந்து வெளியிட முடிவு செய்துள்ளனர்.

எத்தனை மணிக்கு?: வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் குரலில் உருவாகி உள்ள இந்த பாடலை மதன் கார்கி எழுதியிருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு கோட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'விசில் போடு' பாடல் வெளியாகிறது என்கிற அறிவிப்பை தற்போது தளபதி விஜய் கோட் படத்தின் போஸ்டருடன் வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார்.
தரமான சம்பவம்: லியோ படத்தில் இடம்பெற்ற "நான் ரெடி" பாடல் விஜய் குரலில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், "விசில் போடு" பாடலும் விஜய் ரசிகர்களின் புதிய தேசிய கீதமாக மாறிவிடும் என தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் வெளியிட போகின்றனரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











