GOAT முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்?.. கணிப்பே சும்மா தாறுமாறா இருக்கே.. விஜய் வேட்டை ஸ்டார்ட்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் GOAT திரைப்படம் இன்று வெளியாகி சக்கைப்போடு போட்டுவருகிறது. வெளிநாட்டில் 33 கோடி ரூபாய் (இந்திய மதிப்பில்) வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக இங்கும் வசூல் வேட்டை நடத்துவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் முதல் நாளிலேயே தெரிந்துவிட்டதாக விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்தோடு சொல்லிவருகிறார்கள். இந்தச் சூழலில் GOAT படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்த கணிப்பு வெளியாகியிருக்கிறது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. வெங்கட்டின் படங்கள் என்றாலே ட்விஸ்ட்டுக்கும், கலகலப்புக்கும் பஞ்சம் இருக்காது என்பதாலும், விஜய்யுடன் முதன்முறையாக அவர் கூட்டணி வைத்திருப்பதாலும் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இன்று ரிலீஸான படத்துக்கு அதே எதிர்பார்ப்பு ரசிகரக்ள் திரையரங்குகளுக்கு படையெடுத்தனர். ப்ரீ புக்கிங்கிலேயே படத்தின் டிக்கெட் விற்பனை மாஸாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

goat vijay venkat prabhu


திரையரங்கில் திருவிழா: GOAT படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்ப்பதற்கு சென்ற ரசிகர்கள் தியேட்டரை திருவிழா கோலம் பூண வைத்துவிட்டார்கள். பட்டாசு வெடித்து கட் அவுட்டுகளுக்கு ஏகப்பட்ட அபிஷேகங்கள் செய்து அதகளம் செய்தனர். எப்போதும் விஜய்யின் படம் என்றால் முதல் நாள் பண்டிகைதான் என்பதை GOAT படமும் நிரூபித்திருக்கிறது என்பதுதான் கள உண்மை.

பாசிட்டிவ் விமர்சனம்: வெங்கட் பிரபு விஜய்யை வைத்து எந்த மாதிரியான சம்பவம் செய்யப்போகிறார் என்ற ஆவலோடு படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு வெங்கட் செம ட்ரீட் கொடுத்திருக்கிறார். ஆக்‌ஷன், காமெடி, செண்ட்டிமெண்ட் என அனைத்தையும் கலந்துகட்டி ஒரு பக்கா கமர்ஷியல் பேக்கேஜை கொடுத்து தங்களை மகிழ்வித்துவிட்டார் என்று விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். அதேசமயம் முதல் நாள் எப்போதும் ரசிகர்கள் அப்படித்தான் கூறுவார்கள் இரண்டு மற்றும் மூன்றாம் நாளில்தான் படத்தின் உண்மையான ரிசல்ட் தெரியும் என்றும் ஒருதரப்பினர் கூறிவருகிறார்கள்.

யுவன் மேஜிக்: இதற்கிடையே படத்தின் பாடல்கள் வெளியானபோது யுவன் ஷங்கர் ராஜா மீது பலர் அதிருப்தியடைந்தனர். ஆனால் அதிருப்தி அடைந்தவர்கள் படத்தின் யுவனின் ரீ ரெக்கார்டிங்கை கேட்டுவிட்டு மெய்சிலிர்த்து போயிருக்கின்றனர். ஒவ்வொரு சீனுக்கும், விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் யுவன் ஷங்கர் ராஜா கடுமையாக உழைத்திருக்கிறார் என்று அவரையும் பாராட்ட தவறவில்லை ரசிகர்கள். இப்படி படத்துக்கு இதுவரை பாசிட்டிவ்வான விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக படக்குழுவும் ஹேப்பியில் இருப்பதாக தெரிகிறது.

goat vijay venkat prabhu


வசூல் கணிப்பு: விமர்சன ரீதியாக இந்தப் படம் வெல்ல வேண்டுமென்பதில் விஜய்யும், வெங்கட் பிரபுவும் கவனமாக இருந்தார்கள். அதன்படியே நடந்திருக்கிறது. இந்நிலையில் வசூல் ரீதியாகவும் படம் பந்தயம் அடிக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கணித்திருக்கின்றன. அதாவது முதல் நாளான இன்று கண்டிப்பாக படம் 120 கோடி ரூபாய்வரை வசூலித்துவிடும் என்று கூறுகின்றனர் திரைத்துறையினர். ஏற்கனவே வெளிநாடுகளில் இந்திய மதிப்பில் 33 கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X