சின்ன சின்ன கண்கள் பாடலுக்கு காப்பி ரைட்ஸ்.. ‘கோட்’ படக்குழு எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: நடிகர் விஜய்யின் நடிப்பில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில், மிகவும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் படம் தி கோட். இப்படத்தில் இருந்து ஏற்கனவே விசில் போடு பாடல் வெளியான நிலையில், விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு சின்ன சின்ன கண்கள் பாடல் வெளியாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது. தற்போது இந்த பாடல் காப்பி ரைட்ஸ் சர்ச்சையில் சிக்கி உள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படமான 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் செப்டம்பர் 5 ந் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Vijay yuvan shankar Raja

2வது பாடல் சின்ன சின்ன கண்கள்: விசில் போடு எனும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய்யின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு 2வது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' பாடல் 22ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியானது. விஜய் மற்றும் சினேகா நடிப்பில் அழகான இந்த மொலோடி பாடலை கபிலன் வைரமுத்து எழுதி இருக்கிறார். நடிகர் விஜய்யும், யுவன் ஷங்கர் ராஜாவின் தங்கையுமான பவதாரணி பாடியிருக்கிறார்கள். இதில், பவதாரணியின் குரல் செயற்கை நுண்ணறிவு டெக்னாலாஜி (AI) மூலமாக கொண்டுவரப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

காப்பி ரைட்ஸ்: இந்நிலையில் சின்ன சின்ன கண்கள் பாடலை படக்குழு வெளியிடுவதற்கு முன்பே இணையத்தில் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அது குறித்தான எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த படக்குழு, தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, கோட் படத்தின் சின்ன சின்ன கண்கள் பாடல் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட சோசியல் மீடியாவில் உள்ள அனைத்து கணக்குகளுக்கு காப்பி ரைட்ஸ் நோட்டீஸை அனுப்பி உள்ளது. இப்படி மாற்ற சோஷியல் மீடியாவில் பாடல் பரவினால் அது அதிகாரப்பூர்வமாக பாடலின் ரீச்சை குறைத்துவிடும் என்பதால், படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

எல்லாமே சர்ச்சைதான்: அதே போல முதல் பாடலான விசில் போடு பாடல் வெளியான போதும், பாடலுக்கு எட்டுத்திக்கில் இருந்தும் எக்கச்சக்கமான நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தன. இப்பாடலை, கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்கியா எழுதினார் என்றும், நண்பா-நண்பி விசில் போடு என்ற வரிகளை இவர்தான் உண்மையாகவே எழுதினாரா... என்பதை ரசிகர்கள் நம்ப மறுத்தனர். அது மட்டுமன்றி, யுவன் மீதும் அதிக நம்பிக்கை வைத்திருந்த அவர்கள் 'என்னனா பாட்டு இது.' என்று அவர் மீதும் விமர்சனங்களை எழுப்பினர். அதே போல் லியோ படத்தில் நான் ரெடி தான் வரவா பாடலும் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X