’கோட்’ படத்தில் பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.. இத்தனை கோடி சம்பளமா?
சென்னை: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படத்தில் நடித்து வரும் முன்னணி நடிகர்களின் சம்பளம் விவரங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. நடிகர் விஜய்யுடன் 'கோட்' படத்தில் 80ஸ் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவான மோகன் மற்றும் 90s ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோக்களான பிரசாந்த் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்துள்ளனர்.
அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் வெயிட்டான கதாபாத்திரத்தையே இயக்குநர் வெங்கட் பிரபு உருவாக்கி இருப்பதாகவும், நடிகர் விஜய் அனைவருக்கும் சரியான அளவில் ஸ்பேஸ் கொடுக்க வேண்டும் என்கிற கண்டிஷனையும் முதலிலேயே போட்டுவிட்டார் என்றும் கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் மோகன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் சினிமா வட்டாரத்தில் பரவி வருகின்றன. 'கோட்' திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் பிறந்தநாள்: நடிகர் விஜய் தனது 50-வது பிறந்த நாளை ஜூன் 22-ஆம் தேதி கொண்டாட உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக மாறியுள்ள விஜய் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளுடன் தனது பிறந்தநாளை கொண்டாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட கட்சியினர் செய்து வருகின்றனர். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தில் இருந்து ஸ்பெஷல் அப்டேட் இன்று மாலை அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் சம்பளம்: 'கோட்' படத்தில் நடித்த நடிகர் விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 69 படத்துக்கு 250 கோடி ரூபாய் சம்பளமாக விஜய் கேட்கிறார் என்றும் கூறுகின்றனர். அதன் காரணமாகவே டிவிவி நிறுவனம் அந்த படத்திலிருந்து விலகியதாகவும் பேச்சுக்கள் சினிமா வட்டாரத்தில் அடிபட்டு வருகின்றன.
பிரசாந்த் சம்பளம்: நடிகர் விஜய்யை தொடர்ந்து கோட் படத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்றால் பிரசாந்த் கதாபாத்திரம் தான் என்கின்றனர். அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க அதிகபட்சமாக 15 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகள் கழித்து பிரசாந்த் இந்த படத்தில் கமிட் ஆகியுள்ள நிலையில், அந்த அளவுக்கு எல்லாம் சம்பளம் கிடைக்காது என்றும் அதிகபட்சமாக 5 கோடி ரூபாய் வரை சம்பளம் தருவார்கள் என்றும் கூறுகின்றனர்.

மோகன் சம்பளம்: வெள்ளிவிழா நாயகன் மோகன் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த மாதம் அவர் நடிப்பில் 'ஹரா' திரைப்படம் வெளியானது. 'கோட்' படத்தில் அவர் நடித்த அதிகபட்சமாக மூன்று கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'கோட்' படத்தில் விஜய்க்கு மெயின் வில்லனாக மோகன் நடித்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.
பிரபுதேவா சம்பளம்: நடிகர் மோகனை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான பிரபுதேவாவுக்கும் 3 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். சினேகா, லைலா மற்றும் மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட நடிகைகளுக்கு 50 லட்சம் முதல் 80 லட்சம் வரை அவர்களுக்கான கதாபாத்திரங்களை பொறுத்த அளவுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கோட் திரைப்படம் உருவாகி இருப்பதாகவும் 500 கோடிக்கு மேல் வசூல் செய்தால் தான் அந்த படம் லாபத்தை ஈட்டும் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











