GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!

சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்துவந்த சூழலில் அவர் மக்களவை தேர்தலில் வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் நடிகராக இருந்தபோதே ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிப்பதை பிரதானமாக செய்துவந்த அவர், தற்போது அரசியலில் என்ட்ரி ஆகியுள்ளதால் கண்டிப்பாக வாக்களிப்பார் என்றே கூறப்பட்டது. அதற்கேற்ப இன்று காலை சென்னை திரும்பிய அவர் நேரடியாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.

சர்க்கார் பட பாணியில் நேரடியாக விமானநிலையத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற விஜய், தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக மாஸ்கோவில் நடைபெற்ற சூட்டிங்கையும் இதற்கேற்ப அவர் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது. ஆயினும் துபாயில் ஏற்பட்டுள்ள மழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் நாடு திரும்புவது கேள்விக்குறியானது.

Vijay s GOAT movie BTS video shared by movie s creative producer Archana kalpathi

நடிகர் விஜய்: நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களின்மூலம் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். அவரது அரசியல் என்ட்ரி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அவர் சினிமாவிலிருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் தன்னுடைய கனவை துரத்தும் பணியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதால் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் மற்றும் அடுத்ததாக நடிக்கவுள்ள தளபதி 69 படங்களை தொடர்ந்து அவர் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

கோட் சூட்டிங் வீடியோ: கோட் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக இம்மாதம் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் மாஸ்கோ புறப்பட்டு சென்றனர். துபாய் வழியாக விமானம்மூலம் விஜய் மாஸ்கோ சென்றிருந்தார். அங்கு சூட்டிங் நடக்கும் லொகேஷன் வீடியோ மற்றும் விஜய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஆகியவற்றை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவில் விஜய் குழந்தையாக மாறியிருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி சூட்டிங் வீடியோவை ஒட்டுமொத்த கோர்வையாக வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த வீடியோ: இந்த வீடியோவில் விஜய் மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரும் காணப்படுகின்றனர். மேலும் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரும் உள்ளனர். மாஸ்கோவின் கொண்டாட்ட தருணங்கள், விஜய்யின் ஸ்கேட்டிங் பயிற்சி வீடியோ, படக்குழுவினரின் செயல்பாடுகள், மாஸ்கோ வீதிகள், சிறப்பான சுற்றுலாத்தலங்கள், உணவுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த வீடியோவில் அர்ச்சனா கல்பாத்தி இணைத்துள்ளார். தொடர்ந்து படம் குறித்தும் படத்தின் சூட்டிங் குறித்தும் அவர் அப்டேட் தெரிவித்துவரும் சூழலில் இந்த வீடியோவும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.


சென்னை திரும்பிய விஜய்: கோட் படத்தின் சூட்டிங் சென்னை, கேரளா, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்துள்ள சூழலில் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக இம்மாதம் முதல் வாரத்தில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்றிருந்தனர். இந்நிலையில் மக்களவை தேர்தலில் வாக்களிக்க விஜய் வருவாரா என்று கேள்வி எழுந்தது. ஆனால் தேர்தலில் வாக்களிக்கும்வகையில் இன்றைய தினம் காலை சென்னை திரும்பியுள்ளார் விஜய். முன்னதாக துபாயில் பெய்துவரும் மழையின் காரணமாக விமான சேவைகள் ரத்தான சூழலில் அவர் இன்றைய தினம் சென்னை திரும்புவாரா என்று கேள்வி எழுந்தது. ஆயினும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து தன்னுடைய வாக்கையும் பதிவு செய்துள்ளார் விஜய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X