GOAT Box Office: கோட் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்.. முதல் நாளே சொல்லி அடிச்ச தளபதி.. தாறுமாறு!
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், டாப் ஸ்டார் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கோட் படம் முதல் நாளே 100 கோடிக்கும் அதிகமான வசூலை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுக்கும் மேல வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 300 கோடி வசூலை ஈட்டியிருந்தது. தளபதி விஜய்க்கு முதல் 300 கோடி பாக்ஸ் ஆபிஸ் படமாக பிகில் திரைப்படம் மாறியது.

வாரிசு திரைப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வெளியானாலும் அந்த படம் 300 கோடி வசூலை ஈட்டியது. கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம் 600 கோடி வசூலை அள்ளியதாக கூறப்பட்டது.
கோட் படத்தின் பட்ஜெட்: நடிகர் விஜய்க்கு 200 கோடி சம்பளமும் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் ஒரு 50 கோடியும் போன நிலையில், 150 கோடி பட்ஜெட்டில் கோட் திரைப்படம் உருவானது. டீ ஏஜிங், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட இந்த படம் அதற்காக பெரும் தொகையை எடுத்துக் கொண்டது. ஜிஎஸ்டி வரியும் அதிகம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக படத்தின் பட்ஜெட் 380 கோடி முதல் 400 கோடி வரை இருக்கும் என அர்ச்சனா கல்பாத்தி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
கோட் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல்: லியோ படம் முதல் நாளில் எல்சியூ மற்றும் லோகேஷ் கனகராஜ் படம் என்கிற ஹைப்புடன் வெளியான நிலையில், 146 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 126.32 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது ட்வீட் போட்டு தளபதி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
4 நாள் ஹவுஸ்ஃபுல்: கோட் திரைப்படம் தமிழ்நாட்டில் வியாழனன்று வெளியான நிலையில், வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி மற்றும் சனிக்கிழமையான நாளை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 4 நாட்கள் திரையிட்ட இடங்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டன. இந்நிலையில், முதல் வாரமே படத்தின் வசூல் 300 முதல் 400 கோடி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











