இந்தியன் 2, தங்கலான் படத்துக்கு கிடைச்சது தளபதி விஜய் GOATக்கு ஏன் கிடைக்கல?.. கடுப்பில் ஃபேன்ஸ்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஹைதராபாத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கோட் படத்துக்கான டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் ஆரம்பித்து அடுத்த நொடியே விற்றுத் தீர்ந்துவிடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

ரசிகர்கள், நிறுவனங்கள் என பலரும் பல்க் புக்கிங் செய்து கோட் படத்தை முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் பயங்கரமாக செலிபிரேட் செய்ய வேண்டும் என ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ம் தேதி அலப்பறையை கிளப்ப காத்திருக்கின்றனர்.

goat vijay special show


ஆனால், அதிகாலை காட்சிகள் மட்டுமின்றி காலை சிறப்புக் காட்சிக்குமான அனுமதியும் கோட் படத்துக்கு கிடைக்கவில்லை என்கின்றனர்.

10 மணிக்குத்தான் ஷோ: பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் மற்றும் மற்ற திரையரங்குகள் என அனைத்திலும் காலை 10 மணிக்குத்தான் கோட் படத்தின் முதல் காட்சி திரையிடப்படுகிறது. 10 மணி முதல் ஒவ்வொரு காட்சிகளாக அதிகரித்து இரவு நேர காட்சி வரை கோட் படம் அதிக ஸ்க்ரீன்களை ஆக்கிரமித்துள்ளது.

9 மணிக்கு அனுமதி இல்லை: விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு காலை 9 மணி காட்சிக்கு கூட இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்கின்றனர்.

இந்தியன் 2, தங்கலான் படங்களுக்கு: ஆனால், இதற்கு முன்னதாக சமீபத்தில் வெளியான பெரிய படங்களான கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் சியான் விக்ரம் நடித்த தங்கலான் படங்களுக்கே காலை 9 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும் ஆனால், கோட் படத்துக்கு 9 மணி காட்சிக்கு கூட ஏன் அனுமதி கொடுக்கப்படவில்லை என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி அப்செட் ஆகியுள்ளனர்.

4 மணி ஷோ: கேரளா உள்ளிட்ட மற்ற இடங்களில் கோட் படம் அதிகாலை 4 மணிக்கே முதல் ஷோ ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு முன்னதாக அனைத்து முக்கிய காட்சிகளையும் ரசிகர்கள் ஆன்லைனில் சிறு சிறு வீடியோக்களாக வெளியிட்டு விடுவார்கள் என்றும் சோஷியல் மீடியா பக்கமே முதல் நாள் போகக் கூடாது என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X