கேரளாவுக்கு டிக்கெட் போட்டுட வேண்டியதுதான்.. அதிகாலை 4 மணிக்கு வெளியாகும் ’கோட்’.. இங்கே எப்போ?

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் கேரளாவில் அதிகாலை 4 மணிக்கே வெளியாகிறது என்கிற அசத்தலான அறிவிப்பு தற்போது வெளியாகி கேரளா ரசிகர்களை சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோட் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்ற போது, விஜய்யை காண ஏகப்பட்ட ரசிகர்கள் அங்கே திரண்ட காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களையே ஷாக் ஆக்கியது. இந்த அளவுக்கு ஃபேன் பேஸ் கேரளாவில் கிடைப்பதெல்லாம் வேறலெவல் விஷயம் என தளபதி ரசிகர்கள் கொண்டாடினர்.

GOAT Vijay FDFS


இந்நிலையில், தமிழ்நாட்டு ரசிகர்களை முந்திக் கொண்டு 'கோட்’ படத்தை கேரளா ரசிகர்கள் அதிகாலையிலேயே பார்க்கப் போவது உறுதியாகியுள்ளது.

ஆடியோ லாஞ்ச் இல்லை: ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ள நிலையில், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என்றே தெரிகிறது. லியோ படத்திற்கு நடைபெற்றதை போல படம் வெளியான பின்னர் பிரம்மாண்டமாக வெற்றி விழாவை விஜய் நடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஓவர்சீஸில் புக்கிங் ஓபன்: லியோ திரைப்படம் முதல் நாளிலேயே 146 கோடி வசூல் செய்து சாதனை படைக்க முக்கிய காரணமே விஜய்க்கு ஓவர்சீஸில் இருக்கும் மார்க்கெட் தான். கோட் படத்திற்கும் ஓவர்சீஸ் வசூல் ஓஹோன்னு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி கொடுக்காத ஹைப்பை, அதன் டிரெய்லர் வெளியாகி உச்சத்திற்கு ஏற்றியிருக்கிறது. வெளிநாடுகளில் டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்ட நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை கோட் படம் நிகழ்த்தும் என தெரிகிறது. ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் கோட் படம் வெளியாகிறது.

அதிகாலை 4 மணி: தமிழ்நாட்டில் அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், கேரளாவில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, அஜ்மல், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, பிரேம்ஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கே வெளியாகும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளிலும் ரசிகர்கள் முன்னதாகவே படத்தை கண்டுகளிக்க காத்திருக்கின்றனர். கேரளாவுக்கு அருகே இருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள் கேரளவுக்கு படையெடுக்கவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாட்டில் எப்போ?: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதிகாலை காட்சிக்கு தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காலை 6 மணி அல்லது 7 மணிக்கு கோட் படத்தின் முதல் காட்சி தொடங்கும் என தெரிகிறது. ஒருவேளை அனுமதி மறுக்கப்பட்டால் 9 மணிக்குத்தான் கோட் படம் திரையிடப்படும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X