விசில் போடு.. தளபதி விஜய் குரலில் வெளியானது GOAT ஃபர்ஸ்ட் சிங்கிள்.. சும்மா அள்ளுதே
சென்னை: விஜய் இப்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டாகும் என்று விஜய்யின் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் முதன்முறையாக விஜய்யை இயக்குகிறார் வெங்கட் பிரபு. அவர் எப்போது தனது மேக்கிங்கையும், திரைக்கதையையும் வித்தியாசமாகவும், ஜாலியாகவும் கொடுப்பவர் என்பதால் நிச்சயம் அவரது ஸ்டைல் விஜய்க்கு க்ளிக் ஆகும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. சூழல் இப்படி இருக்க தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருக்கிறது.
விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றாலும் விமர்சன ரீதியாக பின்னடைவையே சந்தித்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக ஒழுங்காக இல்லை. இதற்கிடையே லியோ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

GOAT: இப்படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். 90களில் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்த பிரசாந்த் இந்தப் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். நிச்சயம் அவருக்கு இந்தப் படம் மாஸ் ரீ எண்ட்ரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்திலிருந்து இதுவரை வெளியான போஸ்டர்களும் ரசிகர்களிடம் படம் பற்றிய ஆவலை தூண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்போது ரிலீஸ்: படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்தபோது ரம்ஜான் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யும்படி வெங்கட் பிரபு பிளான் செய்திருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியானது. அதன்படி GOAT படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். கண்டிப்பாக விநாயகர் சதுர்த்திக்கு GOAT படம் திருவிழா போல் கொண்டாடப்படும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

ஷூட்டிங் அப்டேட்: படத்தின் ஷூட்டிங் கடைசியாக கேரளாவில் நடைபெற்றது. அதுதான் படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது ரஷ்யாவில் நடந்துவருகிறது. கண்டிப்பாக இதுதான் இறுதிக்கட்ட ஷூட்டிங்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் படத்தில் சிஜி பணிகள் அதிகம் இருப்பதாக வெங்கட் பிரபு சொல்லியிருக்கிறார். பட ரிலீஸுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணியில் கவனம் செலுத்தி விரைவில் வெங்கட் பிரபு முழு பணிகளையும் முடிக்கவிருக்கிறார்.
பெரும் எதிர்பார்ப்பு: இந்தப் படத்தில் இருக்கும் உச்சக்கட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்றுதான் விஜய் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி. ஏனெனில் கடைசியாக புதிய கீதை படத்துக்குதான் விஜய்க்கு இசையமைத்திருந்தார் யுவன் ஷங்கர் ராஜா. விஜய் பக்காவாக நடனம் ஆடக்கூடியவர். எனவே யுவனின் பாடல்கள் விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் கண்டிப்பாக உச்சக்கட்ட வைபை கொடுக்கும் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இன்று GOAT படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா பாடல் இப்போது வெளியாகியிருக்கிறது. பாடலை விஜய் பாட, மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் கொண்டாட்ட பாடலாக அமைந்திருக்கிறது. முக்கியமாக பாடலின் ஆரம்ப வரிகள் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும்வகையில் அமைந்திருப்பது விஜய் ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டமாக இருக்கிறது. பாடலை கேட்ட ரசிகர்கள் கண்டிப்பாக விஜய் இந்தப் பாடலுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பியிருப்பார் என்று உச்சக்கட்ட ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











