என்னடா பண்ணி வச்சிருக்கீங்க.. விஜய்யின் ‘கோட்’ படத்தில் இருந்து பாதியில் ஓடி வந்த சீரியல் நடிகை!

சென்னை: கண்ணான கண்ணே சீரியலில் லீடு ரோலில் நடித்து வரும் நடிகை நிமிஷிகா சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சமீப காலமாக தமிழ் சினிமா படங்கள் எல்லாம் ரொம்பவே மோசமாக உள்ளது. எந்த படத்தையும் ரொம்ப நேரம் உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்றார்.

மேலும், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தை பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே ஓடி வந்து விட்டதாகவும் அவர் பேசியுள்ளார். அவரது அந்த பேட்டி வீடியோ க்ளிப்பிங்கை சோஷியல் மீடியாவில் விஜய்யின் ஹேட்டர்கள் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

vijay goat

தன்னுடைய காதலர் தன்னை ஏமாற்றிவிட்டு இன்னொரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற சோக கதையையும் ஓபனாக அந்த பேட்டியில் நிமிஷிகா சொல்ல, அவரையும் சேர்த்து விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கோட் வசூல் பொய்யா?: ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா, ஜெயராம், சிவகார்த்திகேயன், த்ரிஷா என நடிகர்கள் பட்டாளமே நடித்த கோட் திரைப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், அந்த படத்தின் மொத்த வசூல் 455 கோடி ரூபாய் தான் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. கோட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றும் பொய்யான வசூல் கணக்கை காட்டி அந்த படத்தை வெற்றிப் படமாக மாற்றி விட்டனர் என ஹேட்டர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.

100 கோடி ஷேர்: தமிழ்நாட்டில் கோட் திரைப்படம் 100 கோடி ஷேர் பெற்றதாக நடத்தப்பட்ட சக்சஸ் பார்ட்டியில் விஜய் மற்றும் அர்ச்சனா கல்பாத்தி மட்டுமே கலந்துக் கொண்டு கேக் வெட்டிக் கொண்டாடினர். படத்தில் நடித்த நடிகர்களோ, படத்தை இயக்கிய இயக்குநரோ, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என யாருமே பங்கேற்கவில்லை.

vijay goat

வர படங்கள் எல்லாம் ரொம்ப மோசம்: சமீபத்தில் தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து விட்டு ஏன் தான் இந்த படத்துக்கு வந்தோம் என நினைச்சிருக்கீங்களா என தொகுப்பாளர் கேட்க, அப்படி நிறைய படங்கள் இருக்கு. சமீபத்தில், தமிழில் வெளியான பல படங்கள் அப்படித்தான் இருக்கு. நிறைய படங்களில் பாதியிலேயே எந்திரிச்சு ஓடி வந்துவிட்டேன் என நடிகை நிமிஷிகா படத்தின் பெயரை குறிப்பிடாமல் பொத்தாம் பொதுவாக சொன்ன நிலையில், அடுத்த கேள்வியில் அவரை பேட்டி எடுத்தவர் சிக்க வைத்து விட்டார்.

கோட் படம் பிடிக்கல: கடைசியாக நீங்க பார்த்த படம் என்ன என்கிற கேள்விக்கு, சிரித்தபடியே பதிலளித்த நிமிஷிகா, தளபதியோட கோட் படம் தான் என்றார். இளம் வயது விஜய்யை காட்டுறேன்னு, ஸ்பைக் எல்லாம் வைத்து தளபதியை ரொம்பவே மோசமாக காட்டி விட்டனர். என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க தளபதியைன்னு நினைச்சேன். நான் தல ஃபேனாக இருந்தாலும் தளபதி விஜய்யையும் ரொம்பவே பிடிக்கும். அவரது படங்களைத்தான் பொதுவாக அதிகம் தியேட்டரில் பார்ப்பேன் என்றார். அவரது வீடியோவை தற்போது ஷேர் செய்து நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Read more about: vijay goat கோட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X