3ம் தேதி 3வது சிங்கிள்.. நாளை ஒரு அப்டேட்.. அடுத்தடுத்து ரசிகர்களை திணற வைக்கும் விஜய்யின் கோட் டீம்
சென்னை: நடிகர் விஜய் இயக்குர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் உள்ளிட்டவை ஏறக்குறைய நிறைவடைந்துள்ள சூழலில் நாளை மறுநாள் இந்த படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக டீம் அறிவித்துள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள கோட் படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள கோட் படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப்பாடல்கள் கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ள நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்த படமாக உருவாகியுள்ளது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் முன்னதாக படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக் வீடியோக்களாக வெளியிடப்பட்டுள்ளன. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலங்களுக்கு பிறகு விஜய்யுடன் இந்தப் படத்தின்மூலம் யுவன் சங்கர் ராஜா இணைந்துள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி உள்ளது கோட் படம். படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, லைலா, சினேகா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.
3ம் தேதி 3வது சிங்கிள்: மேலும் இந்த படத்தில் திரிஷா, சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தில் விஜய்யுடன் இணைந்து பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளார் திரிஷா. கடந்த ஆண்டில் லியோ படத்தில் விஜய் மற்றும் திரிஷாவின் கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பாக காணப்பட்ட நிலையில் தொடர்ந்து அடுத்த படத்திலும் விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளார். இந்த படத்தின் மூன்றாவது சிங்கிள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில் இன்றைய தினம் படத்தின் 3வது சிங்கிள் குறித்து படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வரும் 3ம் தேதி கோட் படத்தின் 3வது சிங்கிள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை ஒரு அப்டேட்: இதுகுறித்து போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் இளம்வயது விஜய் மீனாட்சி சவுத்ரியுடன் நிழல் உருவமாக காணப்படுவதாக உள்ளது. மேலும் நாளைய தினம் 11 மணி அளவில் படத்தின் அடுத்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் தற்போது அரசியல் கட்சி துவங்கி அதில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். கோட் படத்தின் ஷூட்டிங், தொடர்ந்து டப்பிங்கையும் நிறைவு செய்துள்ள நடிகர் விஜய் அடுத்ததாக இசை வெளியீட்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தளபதி 69?: விஜய்யின் அரசியல் என்ட்ரியை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க உள்ளதால் இந்த இசை வெளியீடு மிகச் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இந்த இசை வெளியீட்டில் விஜய் சொல்லும் குட்டி ஸ்டோரிக்காகவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அடுத்ததாக விஜய் நடிக்க உள்ள தளபதி 69 படத்தின் அப்டேட்டும் தொடர்ந்து எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழலில் விரைவில் அதையும் நடிகர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











