GOAT Official Box Office: எங்க வந்து யாருகிட்ட.. 13 நாட்களில் கோட் படத்தின் வசூல் இதுதான்!

சென்னை: தளபதி விஜய்யின் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' திரைப்படம் 13 நாட்களில் 400 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி சற்று முன் ட்வீட் போட்டு அறிவித்துள்ளார். கோட் படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து தளபதி ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அர்ச்சனா கல்பாத்தி அறிவித்துள்ளார்.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியாகி 13 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், மிகப்பெரிய வசூல் சாதனையை கோட் திரைப்படம் கடந்துள்ளதாகவும் தளபதியின் டேக் ஓவர் என அர்ச்சனா கல்பாத்தி தனது மகிழ்ச்சியை ஷேர் செய்துள்ளார்.

GOAT GOAT box office Vijay

அடுத்தடுத்து 400 கோடி பாக்ஸ் ஆபிஸ் படங்களை தமிழ்நாட்டில் தளபதி விஜய்யால் தான் கொடுக்க முடியும் என்றும் நீங்க எவ்வளவு தான் படத்தை தோல்வியடைய செய்ய நினைத்தாலும் தளபதி கிட்ட அது நடக்காது என ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

பட்ஜெட் அதிகம்: சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தயாரித்துள்ளது. தளபதி விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி எனக் கூறப்படுகிறது. பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, மோகன், ஜெயராம், லைலா, கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன், த்ரிஷா என பல பிரபலங்களுக்கு சம்பளமே 50 கோடிக்கு மேல் செலவாகியிருக்கும் என்கின்றனர். விஜயகாந்த் ஏஐ, விஜய்க்கு டீ ஏஜிங் என டெக்னாலஜிக்கும் கோடிக் கணக்கில் படத்துக்கு செலவு செய்யப்பட்ட நிலையில், படம் வெளியான பின்னர் விஜய்யின் அரசியல் வருகை காரணமாக அதிகளவில் நெகட்டிவிட்டி பரவியது.

GOAT GOAT box office Vijay

400 கோடி கிளப்: கோட் திரைப்படம் முதல் 4 நாட்களில் 288 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். அதன் பின்னர் அப்படியே அமைதியான நிலையில், கோட் திரைப்படம் சரியாக போகவில்லை என்றும் 300 கோடி தான் வசூல் செய்தது என்றும் 400 கோடி வர வாய்ப்பே இல்லை என யூடியூப் சேனலில் வழக்கம் போல பலர் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில், கோட் திரைப்படம் 13 நாட்களில் 413 கோடி ரூபாய் வசூலை உலகளவில் அள்ளியுள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி தற்போது அறிவித்து அனைவரது வாயையும் அடைத்திருக்கிறார்.

275 கோடி சம்பளம்: கோட் படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கிய விஜய் தளபதி 69 படத்துக்கு 275 கோடி சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே ஷாருக்கான் தான் அதிகபட்சம் 250 கோடி சம்பளம் வாங்கி வருகிறார். அவரது சம்பளத்தையே விஜய் முந்தி விட்டார் என்றும் கூறுகின்றனர். கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தளபதி 69 படத்தை தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

GOAT GOAT box office Vijay

வெற்றி விழா நடத்தப்படுமா?: விரைவில் விஜய்யின் தவெக மாநாடு நடைபெற உள்ளது. கோட் திரைப்படம் 413 கோடி ரூபாய் வசூலை பாக்ஸ் ஆபிஸில் ஈட்டிய நிலையில், அர்ச்சனா கல்பாத்தி கோட் படத்தின் வெற்றி விழாவுக்கும் ஏற்பாடு செய்வாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் இதுவரை அதிக வசூல் கோட் தான் என்றும் இந்த ஆண்டு இந்தியளவில் வெளியான படங்களில் கல்கி 2898 ஏடி மற்றும் ஸ்ட்ரீ 2 படங்களுக்குப் பிறகு அதிக வசூல் பெற்ற படமாக 3வது இடத்தை விஜய்யின் கோட் பிடித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X