என்னடா இது விஜய்க்கு வந்த சோதனை?.. லியோவை விட கோட் பிசினஸ் டல்லாம்.. அந்தணன் பகீர் பேச்சு!

சென்னை: தளபதி விஜய் சரியான நேரத்தில் தான் சினிமாவில் இருந்து அரசியலுக்கு செல்கிறார் என்றும் இல்லை என்றால் அவரது மார்க்கெட் சரிந்துக் கொண்டு வருவது வெளிப்படையாக அம்பலமாகி விடும் என வலைப்பேச்சு அந்தணன் பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

விஜய் நடித்த படங்களிலேயே பிகில் படம் தான் 300 கோடி வசூல் எனக் கூறப்பட்டது. அதன் பின்னர் வாரிசு படமும் நெகட்டிவ் டாக்குகளுடன் 300 கோடி வசூல் என சொல்லப்பட்டது. ஆனால், லியோ படத்தை லோகேஷ் இயக்கிய நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

Vijay s GOAT movie pre release business less than Leo business told by Anthanan

அதன் காரணமாகவே 600 கோடி வசூலை அந்த படம் ஈட்டியது எனக் கூறுகின்றனர். ஆனால், வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் பிசினஸ் லியோவை விட குறைவு தான் என பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் தான் காரணம்: லியோ படம் 600 கோடி வசூல் ஈட்ட விஜய் காரணமே இல்லை என்றும் விக்ரம் படத்தின் மூலம் 500 கோடி வசூலை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தான் காரணம் என அந்தணன் கூறியுள்ளார். பீஸ்ட், வாரிசு என வரிசையாக மொக்கைப் படங்களை கொடுத்து வந்த விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடித்த நிலையில், ஒரு இண்டஸ்ட்ரி ஹிட் கிடைத்தது. அந்த படமும் 2ம் பாதி சொதப்பிய நிலையில், கோட் படத்திற்கான வியாபாரம் சரிவு தான் எனக் கூறியுள்ளார்.

வெங்கட் பிரபு மீது ஹைப் இல்லை: மங்காத்தா, மாநாடு படங்களை வெங்கட் பிரபு இயக்கியிருந்தாலும் கடைசியாக அவர் இயக்கிய மன்மத லீலை, கஸ்டடி படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், கோட் படத்தின் மீது எந்தவொரு ஹைப்பும் சினிமா மார்க்கெட்டில் இல்லை என்றும் இதை புரிந்துக் கொண்டு தான் விஜய் அரசியல் பக்கம் ஒதுங்குகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும், சினிமாவில் இருக்கப் போகும் நடிகர்களுக்கும் மார்க்கெட் சரிவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

கோட் குறைவு தான்: லியோ வியாபாரத்தை விட கோட் படத்தின் பிசினஸ் ரொம்பவே குறைவாக இருப்பதாக அந்தணன் கூறியுள்ளார். கோட் படத்தின் பிசினஸை விட தளபதி 69 படத்தின் பிசினஸ் மேலும், குறையும் என்றும் ஆருடம் கூறியுள்ளார் அந்தணன். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக ஓடிடிக்கள் அதிகம் படையெடுத்து விட்ட நிலையில், பழையபடி சினிமா எல்லாம் பெரிய வசூலை ஈட்டுவது கடினம் தான் எனக் கூறுகிறார்.

250 கோடி சம்பளம்: டிவிவி தயாரிப்பில் எச். வினோத் இயக்கவுள்ள படத்தில் வந்தவரை லாபம் என 250 கோடி சம்பளத்தை நடிகர் விஜய் பேசி வாங்க உள்ளார் என்றும் படத்தின் பிசினஸ் 500 கோடி வந்தாலே போதும் என்றும் அவர் நினைத்திருப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசிக் கொள்வதாக அந்தணன் சமீபத்திய வீடியோ பேட்டியில் கூறியுள்ளார். புதிய தமிழ் படங்களை பார்க்க தியேட்டருக்கு ஆட்களே வராத நிலையில், விஜய் படங்களுக்கே பிசினஸ் குறைந்து வருவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இந்த ஆண்டு வெளியாக உள்ள பெரிய படங்களின் நிலைமை என்ன ஆகுமோ?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X