Vijay: விஜய்யின் GOAT படத்தின் அடுத்த அப்டேட்.. அர்ச்சனா கல்பாத்தி சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள சூழலில் மகன் விஜய்க்காக டீ ஏஜிங் ப்ராசஸ் நடக்கவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வேலைகளுக்காக தற்போது விஜய், வெங்கட் பிரபு மற்றும் படத்தின் சிஜி கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் லாஸ் ஏஞ்சல்சிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பயணமாகியுள்ளனர்.

இந்நிலையில் இதற்கான ஷூட்டிங்கும் அங்கு இரு தினங்கள் எடுக்கப்பட்டு டீ ஏஜிங் வேலைகளுக்காக கொடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே, படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இன்றைய தினம் படம் குறித்த அப்டேட் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகிவரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. கேமியோ கேரக்டர்களில் மட்டுமே நடிகர் விஜயகாந்த், திரிஷா, சிவகார்த்திகேயன் என நடிகர்கள் இணைந்துள்ளனர். விஜயகாந்த் இந்த படத்தின் கிளைமாக்சிற்கு முந்தைய காட்சியில் வரவுள்ளதாகவும், அவருடைய இந்த கேரக்டர் உண்மையான விஜயகாந்தையே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாகும் கூறப்பட்டுள்ளது.

GOAT படம்: இந்த படத்தின் சூட்டிங் சென்னை, மாஸ்கோ, பாங்காக், ஐதராபாத் என அடுத்தடுத்த இடங்களில் நடந்து முடிந்துள்ளது. மேலும் சில பேட்ச் வேலைகளையும் படக்குழுவினர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சென்னையில் எடுத்து முடித்துள்ளனர். இந்நிலையில் தற்போது வெங்கட் பிரபு, விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் விஜய்யின் டீ ஏஜிங் பிராசசிற்காக லாஸ் ஏஞ்சல்சுக்கு சென்றுள்ளனர். விஜய்யின் மகன் கேரக்டருக்காக அங்கு பிரத்தியேக சூட்டிங் எடுக்கப்பட்டு, அதை வைத்து இந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வேலைகளை முடித்துக் கொண்டு வரும் 15ம் தேதி விஜய் சென்னை திரும்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay s GOAT movie producer Archana kalpathi gives update about the movie

அர்ச்சனா கல்பாத்தி அப்டேட்: இந்த படத்தின் டப்பிங் வேலைகளை முன்னதாகவே துவங்கிய விஜய் 50 சதவீத டப்பிங் வேலைகளை முடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து படத்தின் தன்னுடைய போர்ஷன்கள் முழுமையாக நிறைவடைந்தவுடன் மீண்டும் மீதமுள்ள 50 சதவிகித டப்பிங் வேலைகளை அவர் நிறைவு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி படம் குறித்த அப்டேட் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் வேலைகள் இன்று முதல் துவங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் பிறந்தநாளில் 2வது சிங்கிள்: படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஏறக்குறைய 4 மாதங்கள் உள்ள சூழலில் முன்னதாகவே போஸ்ட் புரோடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த படம் விரைவாகவே ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் விஜய்யின் பிறந்த நாளையொட்டி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலையில் படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X