Thalapathy Take Over.. யப்பா பட்டையை கிளப்புதே.. GOAT ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை பார்த்தீங்களா
சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். பெரும் பொருட்செலவில் உருவாகியிருக்கும் இந்தப் படம் கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையுடன் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் படம் நாளை ரிலீஸாவதையொட்டி GOAT படத்தின் ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
கோலிவுட்டின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் GOAT. சென்னை, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது. இப்படத்தில் விஜய்யுடன் ஜெயராம், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. முதன்முறையாக வெங்கட் பிரபுவுடன் விஜய் கூட்டணி வைத்திருப்பதால் பெரும் ஆவல் படத்தின் மீது இருக்கிறது.

டீ ஏஜிங் லுக்: இந்தப் படத்தில் புதுமையாக டி ஏஜிங் லுக் தொழில்நுட்பத்தை கையாண்டிருக்கிறார்கள். அதன்படி விஜய்யை ரொம்பவே இள வயதில் காண்பித்திருக்கிறார்கள். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களில் அந்த லுக்கை பார்த்த தளபதி ரசிகர்கள் வெங்கட் பிரபுவை வறுத்தெடுத்தனர். அதற்கு பிறகு மீண்டும் வேலைகள் செய்து செமயாக டீ ஏஜிங் விஜய்யை கொண்டு வந்திருக்கிறது படக்குழு. ட்ரெய்லரில் அந்த லுக்கை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பி மூடில் இருக்கிறார்கள்.

விறுவிறு டிக்கெட் புக்கிங்: படமானது நாளை ரிலீஸாகவிருக்கிறது. இதனையொட்டி சில நாட்களுக்கு முன்பு டிக்கெட் புக்கிங் தொடங்கியது. எப்போதும் போல் விஜய்யின் இந்தப் படத்தையும் திருவிழா போல் கொண்டாட தயாராகிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். அதன் காரணமாக முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் தமிழ்நாட்டில் விற்று தீர்ந்துவிட்டன. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 5,000 ஸ்க்ரீன்களுக்கு மேல் படம் திரையிடப்படுகிறது. அதேசமயம் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ரேட்டும் அதிகம் இருப்பதாக ஒரு சர்ச்சை எழுந்தது கவனிக்கத்தக்கது.
9 மணி காட்சி இருக்குமா?: இதற்கிடையே படத்துக்கு 9 மணிக்கான சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைக்காமல் இருந்தது. இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருந்தனர். அதேசமயம் சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்தது. அந்தத் தகவல்படியே GOAT படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியிருக்கிறது. இதற்காக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

ப்ரோமோ வீடியோ: எனவே திரையரங்கில் பண்டிகை மோடில்தான் ரசிகர்கள் இருப்பார்கள். இந்நிலையில் நாளை படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில் GOAT ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அந்த வீடியோவில், விஜய் நடனம் ஆடும் காட்சிகளும், சண்டையிடும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. பிரேம்ஜி வாய்ஸ் ஓவர் கொடுத்திருக்கிறார். ஏற்கனவே GOAT ஃபீவரில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து மேற்கொண்டு ஹைப்பாகியிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











