இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்.. கோட் 3வது சிங்கிள் அப்டேட் இதுதானா?
சென்னை: நடிகர் விஜய் -வெங்கட் பிரபு காம்பினேஷனில் உருவாகியுள்ள கோட் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் இரண்டு பாடல்கள் லிரிக் வீடியோவாக முன்னதாக வெளியாகியுள்ளன. இந்நிலையில் நாளைய தினம் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகவுள்ளது. இதையொட்டிய பிரமோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் விஜய்யின் சிங்கிள் ஸ்டெப்கூட இடம்பெறாதது ரசிகர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேறு கேரக்டர்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி நடித்துள்ளனர். பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்களும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் திரிஷா மற்றும் சிவகார்த்திகேயனும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்காக டீ-ஏஜிங் உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் வெங்கட் பிரபு பயன்படுத்தி உள்ளார்.
நாளை 3வது சிங்கிள்: இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த படத்தின் இரண்டு லிரிக் வீடியோ பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. விசில் போடு என்ற முதல் பாடலில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் ஆட்டம் போட்டதை பார்க்க முடிந்தது. இந்நிலையில் இரண்டாவதாக விஜய் பிறந்தநாளையொட்டி வெளியான சின்ன சின்ன கண்கள் பாடலில் விஜய் -சினேகா ஜோடி இணைந்திருந்தனர். இந்த இரண்டு பாடல்களையும் விஜய் பாடியிருந்தார். இந்நிலையில் நாளைய தினம் படத்தின் மூன்றாவது பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகவுள்ளது.
பாடல் பிரமோ: இந்தப் பாடலுக்கான பிரமோவை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆனால் விஜய்யின் ஒரு ஸ்டெப்பைகூட வெளியிடாமல் மீனாட்சி சவுத்ரியுடன் அவர் காணப்படும் புகைப்படத்தை மட்டும் இந்த பிரமோவில் அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பிரமோவை வெளியிட்டதற்கு பதிலாக நேரடியாக பாடலை மட்டும் வெளியிட்டிருக்கலாம் என்று ரசிகர்கள் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். மகன் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இந்தப் பாடலில் ஆட்டம் போடுவார்கள் என்பது மட்டும் தற்போது இந்த பிரமோவில் உறுதியாகியுள்ளது. முன்னதாக விஜய் -திரிஷா காம்பினேஷனலில் 3வது சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.
யுவன் வாய்ஸ்: கடந்த இரு பாடல்களையும் விஜய் பாடியிருந்த நிலையில், இந்தப் பாடலை யுவன் சங்கர் ராஜா, விருஷா பாலுவுடன் இணைந்து பாடியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள இந்தப் பாடலின் தமிழ் வரிகளை கங்கை அமரன் எழுதியுள்ளார். இதேபோல தெலுங்கில் பாடல் வரிகளை ராமாஜோகய்யா சாஸ்திரி எழுதியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன. இந்த பாடல் ரசிகர்களை எந்த அளவு கவரும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











