GOAT: கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்க தமிழ்நாடு அரசு முடிவு?.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
சென்னை: ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25வது படமாக உருவாகியுள்ள தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் நாளை செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் அதிகாலை 4:00 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படும் நிலையில், தமிழ்நாட்டில் 10:00 மணிக்கு தான் கோட் திரைப்படம் திரையிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில், சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கும் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட் திரைப்படத்துக்காக சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.
2000 ரூபாய் டிக்கெட் விலை?: கோட் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படாததற்கு காரணமே விநியோகஸ்தர்கள் 700 ரூபாய் முதல 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுத்ததுதான் தியேட்டர் ஓனர்கள் சிறப்புக் காட்சியை தவிர்க்க காரணம் என சில தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
அமைச்சர் அன்பரசன் கேள்வி: நடிகர் விஜய் 250 கோடி சம்பளம் வாங்கி வரும் நிலையில் தனது ரசிகர்களுக்கு கோட் படத்தின் டிக்கெட்டை ஏன் 2000 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்றும் இலவசமாக டிக்கெட் கொடுக்க வேண்டியதுதானே என்றும் அமைச்சர் அன்பரசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிறப்பு காட்சிக்கு அனுமதி?: தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியாக உள்ள நிலையில், கோட் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என்கிற நிலை உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு கோட் படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
காத்திருக்கும் ரசிகர்கள்: கோட் படத்திற்கான டிக்கெட் கிடைக்காமல் ஏகப்பட்ட ரசிகர்கள் எவ்வளவு விலைக்கு கிடைத்தாலும் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், சிறப்பு காட்சிக்கான அனுமதி கிடைத்தால், மேலும் பலர் முதல் நாள் முதல் ஷோவே தளபதி விஜய்யின் கோர்ட் படத்தை கண்டு ரசிப்பார்கள் என்றும் சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்க வேண்டும் என்றும் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











