GOAT Story: ஒரே ஒரு சின்ன வீடியோ.. ஒட்டுமொத்த ’கோட்’ கதையும் அம்பலமாகிடுச்சே.. இதுதான் ஸ்டோரியா?

சென்னை: கல்கி படத்தின் டிரெய்லர் மூலம் கல்கி படத்தின் கதையையே படக்குழுவினர் ரிவீல் செய்ததை போல தற்போது கோட் ஷாட்ஸ் வீடியோ மூலம் ரசிகர்கள் விஜய் நடித்துள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தின் ஒட்டுமொத்த கதையே இப்படித்தான் இருக்கும் என கெஸ் செய்துள்ளனர்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், மீனாக்‌ஷி சவுத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோட் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகும் என மீண்டும் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.

Vijay GOAT Vijay Birthday Venkat Prabhu Sneha Prashanth Prabhudeva

இந்நிலையில், கோட் படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் வலம் வரும் தகவல் குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம் வாங்க..

கோட் கதை: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் டைட்டிலை சுருக்கமாக கோட் என ரசிகர்கள் முதல் படக்குழு வரை பயன்படுத்தி வருகின்றனர். ஸ்பெஷல் ?ஸ்குவாட் அதிகாரியாக இருக்கும் விஜய் தனது நண்பர்களான பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்ட டீமுடன் எதிரிகளை வேட்டையாடி வருகிறார். இன்னொரு பக்கம் மனைவி சினேகா மற்றும் மகன் விஜய் என சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.

Vijay GOAT Vijay Birthday Venkat Prabhu Sneha Prashanth Prabhudeva

ஆனால், அப்போது நடக்கும் ஒரு பெரிய விபரீதம் காரணமாக அப்பா விஜய் தலைமறைவாகி விடுகிறார். அப்பா விஜய்யை எதிரியாக நினைத்து வளர்ந்து வரும் மகன் விஜய் அவரை கொல்லத் துடித்துக் கொண்டிருக்கும் நிலையில், இறுதியில் கூடவே இருந்த நண்பர்களில் ஒருவர் செய்த சதி தான் இது என தெரிய வர அப்பா விஜய்யுடன் இணைந்து கொண்டு கிளைமேக்ஸில் வில்லனை போட்டு பொளப்பது தான் கோட் படத்தின் கதையாக இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் கோட் ஷாட்ஸ் வீடியோவை பார்த்தே மொத்த கதையையும் உருவாக்கி சோஷியல் மீடியாவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

பல படங்கள்: இதே கதையில் பல படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நிலையில், வெங்கட் பிரபு நிச்சயம் ஏதாவது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மேஜிக்கை உள்ளே கொண்டு வந்து ஜெமினி மேன் போல விளையாடி இருந்தால் தான் நிச்சயம் படம் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் தளபதி ரசிகர்களுக்கு தரமான விருந்தாக அமையும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை என்கின்றனர்.

Vijay GOAT Vijay Birthday Venkat Prabhu Sneha Prashanth Prabhudeva

போட்டி போடும் அஜித்: விஜய்யின் பிறந்தநாள் அன்றும் அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகும் அளவுக்கு அஜித் தரப்பில் இருந்தும் கார் ரேஸ் வீடியோக்கள் மற்றும் தாறுமாறான புகைப்படங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை ஹேப்பி ஆக்கியுள்ளது. மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளுக்கு விடாமுயற்சி அப்டேட் வரும் என காத்திருந்து ரசிகர்கள் ஏமாந்துப் போன நிலையில், விஜய் பிறந்தநாளுக்கு போட்டிப் போட்டு அஜித் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் வெளியாகி வருகிறதே என விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X