ரம்ஜானுக்கு ட்ரீட் இல்லாம எப்படி?.. ரசிகர்களுக்கு ‘கோட்’ விருந்து கொடுக்க ரெடியான தளபதி விஜய்!

சென்னை: ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பிரியாணி படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து 'கோட்' எனும் படத்தை இயக்கி வரும் நிலையில், ட்ரீட் கொடுக்காமலா இருப்பார் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், காத்திருந்தது வீண் போகவில்லை என்பது போல காலையிலேயே ட்வீட் போட்டு அர்ச்சனா கல்பாத்தியிடம் பர்மிஷன் வாங்கி விட்டார்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தெரிவித்து விட்டார். அடுத்ததாக ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுக்கவும் க்ரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

Vijay s GOAT team will give pure Ramzan treat today noon

வரும் ஏப்ரல் 14ம் தேதி ஃபர்ஸ்ட் சிங்கிள் வரவுள்ள நிலையில், அதை முன்னிட்டு அறிவிப்பா? அல்லது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு இன்று வெளியாகப் போகிறதா என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெளிநாட்டில் கோட்: சென்னை, பாண்டிச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்னதாக கோட் படத்தின் படப்பிடிப்பை வெளிநாட்டில் முடித்து விட்டு மீண்டும் சென்னை திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரம்ஜான் ட்ரீட்: ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய நடிகர் விஜய் கோட் படத்தின் அடுத்த சூப்பரான அப்டேட்டை இன்று மதியம் 1.05 க்கு வெளியிடப் போவதாக அப்டேட் வெளியாகி இருக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு உள்ளிட்ட கோட் படக்குழுவினர் இதை தற்போது உறுதி செய்துள்ளனர்.

என்ன அப்டேட்: அதிகபட்சமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு கோட் படம் ரிலீஸ் ஆகும் என்கிற அறிவிப்பை வெளியிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதம் இந்தியன் 2, ஆகஸ்ட் மாதம் புஷ்பா 2, அக்டோபர் மாதம் வேட்டையன் வெளியாக உள்ள நிலையில், கோட் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay s GOAT team will give pure Ramzan treat today noon

ஃபர்ஸ்ட் சிங்கிள்: யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடி ஆடியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான அப்டேட் கூட இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி இருந்தாலும், கோட் ட்ரீட் ரம்ஜானுக்கு இன்னும் சில மணி நேரங்களில் ரசிகர்களுக்கு சுடச்சுட பரிமாறப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X