GOAT Trailer: மருதமலை மாமணியே முருகய்யா.. தளபதி vs இளைய தளபதி.. கோட் டிரெய்லர் எப்படி இருக்கு?
சென்னை: வெங்கட் பிரபு அஜித்தின் ஏஜென்ட் என்கிற அளவுக்கு ட்ரோல்கள் பறந்து வந்த நிலையில், அதெல்லாம் இல்லைங்க, அஜித் சொன்னது போலவே மங்காத்தாவை விட 100 மடங்கு தரமான படத்தை கொடுக்க அவர் உழைத்துள்ளார் என விஜய் ரசிகர்கள் சொல்லி கொண்டாடும் அளவுக்கு வெயிட்டிங்கிற்கு வொர்த்தாக கோட் படத்தின் டிரெய்லர் வெளியாகி இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி உள்ள 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ள நிலையில், காலையில் இருந்தே கூல் சுரேஷ் மோடுக்கு அர்ச்சனா கல்பாத்தி சென்று விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான 3 பாடல்களும் சுமார் ரகம் தான் என ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில், இளம் விஜய்யின் சிஜி காட்சிகளும் சரியில்லை எனக் கூறப்பட்டன. இந்நிலையில், டிரெய்லர் எந்தளவுக்கு சிறப்பாக உள்ளது என்பது குறித்து விரிவாக இங்கே பார்க்கலாம் வாங்க..
இளைய தளபதி மிரட்டுறாரே: கோட் படத்தில் இளம் விஜய்யை வெங்கட் பிரபு எப்படி காட்டப் போகிறார். டிரெய்லரில் அவரை காட்டாமலே ஏமாற்றி விடுவார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், ஏகப்பட்ட இளைய தளபதி விஜய்யின் காட்சிகளை அடுக்கி ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியை வெங்கட் பிரபு கொடுத்திருக்கிறார். நடிகர் விஜய்யின் டீ ஏஜிங் காட்சிகள் பாடலின் லிரிக் வீடியோவில் இடம்பெற்று ட்ரோல் செய்யப்பட்ட நிலையில், கோட் டிரெய்லரில் அந்த காட்சிகள் இன்னும் பெட்டராகவே உருவாக்கப்பட்டுள்ள இடத்திலேயே வெங்கட் பிரபு மற்றும் சிஜி டீம் ஸ்கோர் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

பிரசாந்த் முதல் மோகன் வரை: தீவிரவாதியாகவும் மெயின் வில்லனாகவும் மோகனை காட்டுகின்றனர். பிரசாந்த், பிரபுதேவா விஜய்யின் டீமாக காட்டப்படுகின்றனர். லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், பிரேம்ஜி, அஜ்மல் என அனைவரையும் ஒரே டிரெய்லரில் அழகாக அடுக்கி கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
சிங்கம் சிங்கம் தான்: காந்தி எனும் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். ஏற்கனவே மகான் படத்தில் சியான் விக்ரம் காந்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து சரக்கு அடித்த காட்சிகளை போலவே இந்த படத்திலும் இருப்பது எந்தளவுக்கு கை கொடுக்கும் என்பது சந்தேகம் தான். வயசு ஆகிடுச்சு, இனிமேல் என்னால் என்ன பண்ண முடியும்னு தானே நினைக்கிறீங்க என விஜய் பேச ஒய்ஜி மகேந்திரன் லயன் இஸ் ஆல்வேஸ் லயன் என சொல்லும் வசனம் வேறலெவலில் ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கிறது. ஆரம்பத்திலேயே பிரசாந்த் உங்களை லீட் பண்ணப் போறது ஒரு புது லீடர் என்கிற வசனத்தில் விஜய்யின் அரசியல் வாடை ஹெவியாகவும் சரியாகவும் அடிக்கிறது.
உண்மையாவே கோட் தான்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என டைட்டில் வைத்து விட்டு இயக்குநர் வெங்கட் பிரபு கஸ்டடி அளவுக்கு ஒரு படத்தைக் கொடுத்து விடுவாரோ என நினைத்து சற்றே பயந்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு துப்பாக்கி, கில்லி, போக்கிரி என அனைத்து ஸ்டைல் ஆக்ஷன்களையும் தாண்டி ஒரு சிறப்பான ஆல் டைம் ஆக்ஷன் என்டர்டைனர் படமாக கோட் படத்தை கொடுத்திருக்கிறார். “No one can Stop Me" என இளைய தளபதி விஜய் சொல்லும் இடங்கள் எல்லாம் தியேட்டர் தெறிக்கப்போவது உறுதி. கோட் படத்தின் டிரெய்லரை பொறுத்தவரை வெங்கட் பிரபு மிகப்பெரிய அதிர்வலையை கிளப்பியுள்ளார். செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ள கோட் படத்தில் எந்தவொரு சொதப்பலும் இல்லாமல், இதே கூஸ்பம்ப்ஸ் படம் முழுக்க இருந்தால், மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும்.


Click it and Unblock the Notifications











