விஜய் ரசிகர்களுக்கு ஷாக்.. ஹிந்தியில் வெளியாகாத GOAT..வசூலில் அடி விழுமோ?.. காரணம் என்ன தெரியுமா?
மும்பை: விஜய் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கிறது GOAT திரைப்படம். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் அந்தப் படம் கண்டிப்பாக வசூலிலும் சக்கைப்போடு போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் ஹிந்தியில் படம் வெளியாகாதது விஜய் ரசிகர்களுக்கு ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில் ஹிந்தியில் வெளியாகாத காரணம் குறித்து தெரியவந்திருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் GOAT திரைப்படம் இன்று வெளியாகியிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரிலீஸான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் விஜய்யின் நடிப்பையும், வெங்கட் பிரபுவின் இயக்கத்தையும் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். நாட்கள் செல்ல செல்ல விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு மேற்கொண்டு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

6,000 ஸ்க்ரீன்கள்: விஜய்யை வைத்து பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரித்திருக்கிறது. உலகம் முழுவதும் 6,000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் பிரமாண்டமாக படத்தை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டபடியே ரிலீஸும் செய்திருக்கிறார்கள். மேற்கொண்டு இந்தப் படம் ஏஜிஎஸ் நிறுவனத்துக்கு 25ஆவது படம் என்பதும் கூடுதல் சிறப்பாகும்.
மகிழ்ச்சியில் படக்குழு: முதலில் தமிழ்நாட்டில் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று ஒரு சிக்கல் படத்துக்கு வந்தது. ஆனால் மனம் தளராத அர்ச்சனா கல்பாத்தி தொடர்ந்து எடுத்த முயற்சிகளின் பலனாக கடைசி நேரத்தில் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தது. அது ஒருபக்கம் மகிழ்ச்சியை கொடுக்க; மறுபக்கம் படத்துக்கு வரும் பாசிட்டிவ் விமர்சனங்களும் ஏஜிஎஸ்ஸை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாக படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
வசூல் வேட்டை: வெளிநாடுகளில் GOAT படம் வசூல் வேட்டையை ஆரம்பித்துவிட்டது என்று சொல்கிறார்கள். அதாவது இந்திய மதிப்பில் இதுவரை 33 கோடி ரூபாயை படம் வசூலித்திருக்கிறதாம். அதேபோல் இந்தியாவைப் பொறுத்தவரை படம் வெளியான இடங்களில் எல்லாம் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக முதல் நாளில் கண்டிப்பாக 120 கோடி ரூபாய்வரை படம் வசூலிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் கணிப்பாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
ஹிந்தியில் நோ: ஆனால் இந்த வசூலை பாதிக்கும்வகையில் ஒரு விஷயமும் நடந்திருக்கிறது. அதாவது திட்டமிட்டிருந்தபடி ஹிந்தியில் படம் வெளியாகவில்லை. ஹிந்தி சினிமாவைப் பொறுத்தவரை மல்டி பிளக்ஸ் திரையரங்குகள்தான் அதிகம். அதேபோல் அங்குள்ள விதிமுறைப்படி ஒரு படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி எட்டு வாரங்கள் கழித்தே ஓடிடியில் வெளியிடப்படும். ஆனால் GOAT படக்குழுவால் ஓடிடியில் வெளியிட அவ்வளவு காலம் காத்திருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அங்கிருக்கும் திரையரங்குகளிடம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவு எட்டப்படாததால் படமானது ரிலீஸாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் படத்தின் வசூலில் அடி விழுந்துவிடுமோ என்ற அச்சமும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











