காஷ்மீர் ஃபைல்ஸ்.. கேரளா ஸ்டோரிக்கு எல்லாம் கிடைக்குது.. ஜனநாயகனுக்கு ஏன்? மன்சூர் அலி கான் காட்டம்!
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் நல்ல தீர்ப்பை வழங்கி விடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தணிக்கை வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.
500 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படத்தை சுற்றி ஏகப்பட்ட பிசினஸ் மற்றும் பல ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ள நிலையில், சென்சார் ஏன் தம்பி விஜய் படத்துக்கு கொடுக்கப்படவில்லை என மன்சூர் அலி கான் ஆவேசமாக பேசியுள்ளார்.

மேலும், பெரிய சர்ச்சையை கிளப்பிய படங்களுக்கே சென்சார் கிடைக்கிறது என்றும் மத்திய அரசு தலையீடு இல்லாமல் சென்சார் பாடி தன்னிச்சையாக செயல்படக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொங்கலுக்கு வராம பக்ரீத்துக்கா வரும்: ஜனநாயகன் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டும். டிசம்பர் மாதமே சென்சாருக்கு படம் அனுப்பப்பட்ட நிலையிலும், கடைசி நேரத்தில் வந்த புகாரின் அடிப்படையில் அந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தராமல் தொடர்ந்து நீதிமன்றத்தில் பந்தாடுகின்றனர். பொங்கலுக்கு வராமல் படம் பக்ரீத்துக்கா வரும் என மன்சூர் அலி கான் ஆவேசமாக பேசியுள்ளார்.
காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி: இஸ்லாமிய மதத்தினரை குறிவைத்து தாக்கும் மத ரீதியான படங்களுக்கு எல்லாம் தொடர்ந்து எப்படி சென்சார் கிடைக்கிறது. தம்பி விஜய் ஒரு மாஸ் ஹீரோ அவரது படத்துக்கு ஏன் கொடுக்க மாட்டுறீங்க, காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரிக்கு எல்லாம் எப்படி கொடுத்தீங்க சென்சார் போர்டும் வேண்டாம் ஒரு டேஷும் வேண்டாம் என ஆவேசமாக மன்சூர் அலி கான் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
சென்சார் போர்டு தனித்துவமாக இருக்கணும்: சென்சார் போர்டில் 4 இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர், பத்திரிகையாளர்கள் என சினிமாவை சார்ந்த பொதுக் கருத்துக் கொண்ட நல்லவர்கள் இருக்க வேண்டும். மத்திய அரசு வசம் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் சென்சார் போர்டே தேவையில்லை என்றும் மன்சூர் அலி கான் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











