Jana Nayagan: பிப்ரவரி டவுட்டு தானாம்.. ஜன நாயகன் ரிலீஸ் இந்த தேதிக்கு தள்ளிப்போகிறதா?.. வட போச்சே!

சென்னை: விஜய்யின் ஜனநாயகன் (Jana Nayagan) படத்துக்கு தணிக்கைச் சான்றிதழை சொன்னது போல தராமல் கடைசி நேரத்தில் ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியது தொடர்பாக கோபப்பட்ட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. தனி நீதிபதி படக்குழுவுக்கு சாதகமாக உத்தரவிட்ட நிலையில், சென்சார் போர்ட் மேல் முறையீடுக்குச் செல்ல, அங்கே கேவிஎன் தரப்புக்குச் சாதகமாக தீர்ப்பு வரவில்லை.

மறுபடியும் முதல்ல இருந்தா என நினைத்த தயாரிப்பு நிறுவனம் இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட்டு சரண்டர் ஆகிவிடலாம் என ரிவைசிங் கமிட்டிக்கு செல்ல முடிவெடுத்து வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது.

Vijay s Jana Nayagan may get postponed to March

பராசக்தி படத்துக்கு கிடைத்தது போல 3 நாட்களில் சென்சார் கிடைத்து விடும். படத்தை பிப்ரவரி 19 அல்லது 20ம் தேதி ரிலீஸ் செய்து விடலாம் என நினைத்த ஜன நாயகன் படத்துக்கு தற்போது மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குண்டை தூக்கிப் போட்டுள்ளனர்.

லேட்டாகும்: ஜன நாயகன் படத்துக்கு இந்த வார இறுதிக்குள் சென்சார் கிடைத்து விட்டால் கூட படக்குழு அவசர அவசரமாக படத்தின் ரிலீஸ் பிளான்களை ஆரம்பித்து அடுத்த வாரம் படத்தை வெளியிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதிகபட்சமாக மேலும், ஒரு வார காலம் தாமதமாகும் என சில ரகசிய தகவல்கள் கசிந்துள்ள நிலையில், படக்குழு ரொம்பவே அப்செட்டாக உள்ளதாக கூறுகின்றனர்.

மார்ச் முதல் வாரம்: பிப்ரவரி கடைசி வாரமான பிப்ரவரி 27ம் தேதி படம் வெளியாகவும் வாய்ப்புகள் குறைவு என்றே கூறுகின்றனர். மாத கடைசியில் படத்தை வெளியிட்டால் எதிர்பார்த்த வசூல் வராது என்றும் மார்ச் முதல் வாரத்தில் 5ம் தேதி அல்லது 6ம் தேதி படத்தை ரிலீஸ் செய்தால் ரசிகர்கள் எந்தவொரு சங்கடமும் இன்றி தியேட்டர்களை நோக்கி படையெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் தலைவலி: ஆனால், அதே நேரம் மார்ச் 19ம் தேதி கேவிஎன் தயாரிப்பில் யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள டாக்ஸிக் படம் வெளியாக உள்ள நிலையில், அந்த படத்துக்கான புரமோஷன் வேலைகளையும் கேவிஎன் நிறுவனம் ஆரம்பிக்க வேண்டிய சூழல் உள்ள நிலையில், பிப்ரவரி மாதத்துக்குள் ஜன நாயகனை ரிலீஸ் செய்ய எந்தளவுக்கு முடியுமோ முயற்சி செய்து வருவதாக கூறுகின்றனர். ஆனால், அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தணிக்கை வாரியம் கையில் தான் உள்ளது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X