Jana Nayagan Positives: முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன்.. எச். வினோத் செய்த தரமான சம்பவம்.. அரசியல்!

சென்னை: பகவந்த் கேசரியை விட பக்காவான படமாக ஜன நாயகன் உருவாகியுள்ளதா? இல்லையா? ஒட்டுமொத்த ரசிகர்களையும் இந்த படம் கவருமா? என ஏகப்பட்ட விவாதங்கள் வெடித்தாலும் ஜன நாயகன் படத்தில் உள்ள இந்த பாசிட்டிவான விஷயங்கள் கண்டிப்பாக மக்களை தியேட்டர்களை நோக்கி வரவழைத்து விடும்.

தேர்தலுக்கு முன்னதாக ஜன நாயகன் வெளியாகி இருந்தால் 150 இடங்களில் தவெக வென்றிருக்கும் என விமர்சகர் ரமேஷ் பாலா கருத்து தெரிவித்துள்ளார். விஜய்யை தவிர படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமில்லை என பிரசாந்த் ரங்கசாமி கழுவி ஊற்றியுள்ளார்.

Vijay s Jana Nayagan Movie Postive Review in Tamil These Scene definitly worth watching

பகவந்த் கேசரி படத்தை விட 2ம் பாதியில் தனக்கு கிடைத்த ஸ்பேஸில் இயக்குநர் எச். வினோத் பிரகாஷ் ராஜை வைத்து புகுந்து விளையாடி இருப்பதும் அந்த கண்ணகி சிலைக்கு கீழ் போராட்டம் நடத்தும் ரேச்சல் ரெபேக்காவின் நடிப்பும் படத்துக்கு பெரிய பிளஸ் ஆக மாறி நிற்கின்றன. மேலும், ஜன நாயகன் படத்தின் பாசிட்டிவான விஷயங்கள் குறித்து இங்கே பார்க்கலாம் வாங்க..

தளபதி விஜய் தான் முதல் பாசிட்டிவ்: ஜன நாயகன் படம் தான் தனது கடைசி படம் என விஜய் அறிவித்த நிலையில், தேர்தலில் தோற்றுவிட்டு மீண்டும் நடிக்கப் போய்விடுவார் என்றும் இன்னொரு படத்துக்கு கதை கேட்கிறார் என்றும் ஏகப்பட்ட ரூமர்கள் கிளம்பின. 10 சதவீதத்துக்கு மேல் விஜய் வாங்கினால் அரசியல் பேசுவதையே நிறுத்தி விடுகிறேன் என ரங்கராஜ் பாண்டே பேசிய நிலையில், ஜன நாயகன் படத்தை இயக்கிய இயக்குநர் எச். வினோத்துக்கே விஜய் வெல்வார் என்கிற நம்பிக்கை இல்லை என்பது தான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அனைவரது எண்ணங்களையும் மக்கள் சக்தியுடன் பொய்யாக்கி முதலமைச்சராக மாறியுள்ள விஜய் இந்த படத்தின் மூலம் மகளிர் ஓட்டுக்களையும் சிறுபான்மையினர் ஓட்டுக்களையும் பெறுவதற்கான அரசியல் செய்தது தான் இந்த படம் தேர்தல் வரை வெளியாக முடியாதபடி தடுக்கப்பட்டதற்கான உண்மையான காரணம் என்பது படத்தை பார்த்தாலே தெள்ளத் தெளிவாக புரிகிறது.

கண்ணகி சிலை போராட்டம்: மதுரையை எரித்த கண்ணகி போல நடிகை ரெபேக்கா ரேச்சல் கண்ணகி சிலைக்கு கீழே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த தனது கணவருக்காகவும் கடத்தி வைக்கப்பட்ட தனது மகளுக்காகவும் நடத்திய போராட்டமும் அரசியல்வாதியான பிரகாஷ் ராஜின் அட்டூழியத்தை ஒழிக்க தளபதி வெற்றிக் கொண்டான் அந்த ஊருக்கு வரும் காட்சிகள் எல்லாமே தியேட்டரில் பிளாஸ்ட் மோடு தான்.

குட் டச் பேட் டச் சீன்: கிளைமேக்ஸுக்கு முன்னதாக பள்ளி விழா மேடையில் ஏறி மாணவர்களுக்கு குட் டச் மற்றும் பேட் டச் பாடத்தை விஜய் எடுக்கும் காட்சிகளை யூடியூபில் தனியாக வெளியிட்டால் அந்த காட்சிகள் குழந்தைகளிடம் சென்று சேரும் என்றே தோன்றுகிறது. பகவந்த் கேசரி படத்தில் வந்த இந்த காட்சிக்காகவே தான் விஜய் இந்த படத்தை ரீமேக் செய்ய நினைத்தார் என்றும் கூறுகின்றனர். அந்த காட்சியும் படத்தில் பக்காவாக ஒர்க்கவுட் ஆகியுள்ளது. இதுபோல படத்தில் ஏகப்பட்ட பாசிட்டிவ் காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்களையும் பொதுமக்களையும் அவை கவரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X