விஜய்யின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. போடு வெடிய இதோ வந்துவிட்டது தேதி..ரசிகர்கள் மகிழ்ச்சி

சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜன நாயகன் திரைப்படம் ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இந்தப் படம்தான் விஜய் திரையில் தோன்றும் கடைசி படம் என்று கூறப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடைசி படம் மெகா ப்ளாக் பஸ்டராக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி ஹெச்.வினோத்தும் தனது முழு உழைப்பை கொட்டி உழைத்திருக்கிறாராம். இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர் விஜய். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் அவரது படங்கள் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். இதன் காரணமாக அடுத்த ரஜினிகாந்த் விஜய்தான் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து கூறுவதுண்டு. அப்படி அவர்கள் கூறியதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும், ரஜினியின் ரசிகர்களுக்கும் சமூக வலைதளங்களில் பெரிய மோதல்களையும் தமிழ் திரையுலகம் பார்த்தது. ஆனால் அதனை அவர்கள் இரண்டு பேரும் ஒரு வழியாக தங்கள் பேச்சின் மூலம் கட்டுப்படுத்திவிட்டார்கள்.

விஜய்க்கு கிராஃப் சரியில்லை?: விஜய்க்கு கடைசியாக வெளியான கோட், வாரிசு, பீஸ்ட் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. அதேசமயம் வசூல் ரீதியாக அந்தப் படங்கள் தங்களுக்கு லாபத்தையே கொடுத்தன என்று அப்படங்களின் தயாரிப்பாளர்கள் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது. அந்த மூன்று படங்களில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் படத்தை விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே நம்பியிருந்தார்கள். ஆனால் வெங்கட்டால் அஜித்துக்கு கொடுத்த மெகா ஹிட் போல் விஜய்க்கு கொடுக்க முடியவில்லை.

ஜன நாயகன்: இப்படிப்பட்ட சூழலில்தான் ஹெச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் மமிதா பைஜு, விருமாண்டி அபிராமி, வரலட்சுமி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். அனிமல், கங்குவா ஆகிய படங்களில் வில்லனாக கலக்கிய பாபி தியோல்தான் இதிலும் வில்லன் ரோலை ஏற்றிருக்கிறார். அனிருத் இசையமைக்க கேவிஎன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

Vijay s Jana Nayagan Movie Will Hit Screens on January 9th 2026

பெரிய எதிர்பார்ப்பு: இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. ஏனெனில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை தொடங்கியிருக்கிறார். அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சி களமிறங்கவிருக்கிறது. எனவே இப்போதிருந்தே அதற்கான பணிகளில் விஜய்யும் கட்சி தொண்டர்களும் இறங்கிவிட்டார்கள். விஜய் தொடர்ந்து அரசியல் மேடைகளில் ஏறிவருகிறார். குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். முழுநேர அரசியல்வாதியாக மாறிவிட்டதால் ஜன நாயகன் படம்தான் அவரது கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

எப்போது ரிலீஸ்?: படத்திலிருந்து இரண்டு போஸ்டர்கள் கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி வெளியாகின. அந்தப் போஸ்டர்களை பார்த்த ரசிகர்களில் ஒருதரப்பினர் கண்டிப்பாக ஜன நாயகன் ஒரு அரசியல் ரீதியான படமாக இருக்கும் என்று கணிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று வினோத் அறிவித்துவிட்டார். சூழல் இப்படி இருக்க படம் எப்போது ரிலீஸாகும் என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Take a Poll

வெளியான அப்டேட்: அதுகுறித்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த கேவிஎன் நிறுவனம் இன்று சர்ப்ரைஸாக ஒரு அப்டேட்டை கொடுத்திருக்கிறது. அதன்படி படமானது 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது என்று அறிவித்திருக்கிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக அன்றைய தினம் தங்களுக்கு திருவிழாதான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Read more about: vijay jana nayagan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X