பாலிவுட்டே தெறிக்கப்போகுது.. பாபி தியோல் போலீஸா?.. அப்போ ஜனநாயகன் அந்த பட ரீமேக் இல்லையா?

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படம்தான் கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்புகளை சந்தித்த படங்களில் முதல் இடத்தில் இருக்கிறது. படத்திலிருந்து இதுவரை இரண்டு சிங்கிள்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசியாவில் நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலுக்கு வந்திருக்கும் விஜய் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவிருக்கிறார். ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. விஜய்யுடன் பூஜா ஜோடி சேரும் இரண்டாவது படம் இதுவாகும். ஏற்கனவே நடித்த பீஸ்ட் படம் படுதோல்வி அடைந்தது போல் இதுவும் ஆகக்கூடாது என்பது அவரது விருப்பம்.

எப்படி இருக்கும் படம்?: இப்படம் அரசியல் ஜானரில் உருவாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதெல்லாம் இல்லை என்பதை வினோத் உறுதிப்படுத்திவிட்டார். விஜய்யை அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். எனவே அவர்கள் அனைவரையும் திருப்திப்படுத்தும்வகையில்தான் படம் உருவாக வேண்டும். அதுதான் நல்லதும்கூட. அவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட், லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய நான்கு படங்களிலுமே அது மிஸ்ஸாகிவிட்டது என்பது கவனத்துக்குரிய ஒன்று.

Vijay s Jana nayagan New Announcement Zee Studios Acquires North India Rights
Photo Credit:

பகவந்த் கேசரி ரீமேக்?: முழுக்க முழுக்க இது அரசியல் ஜானரில் உருவாகாவிட்டாலும் படத்தில் கண்டிப்பாக அரசியல் வாடை இருக்கும் என்றே படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது. அதேசமயம் இதில் மொத்தம் பத்து சண்டை காட்சிகள் இருப்பதாகவும் ஒரு தகவல் கோலிவுட்டில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க தெலுங்கில் பாலைய்யா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் இப்படம் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த மாதம் ரிலீஸ்: படமானது அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் பத்தாம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதன் காரணமாக விஜய் ரசிகர்களுக்கும் எஸ்கே ரசிகர்களுக்கும் சோஷியல் மீடியாவில் சண்டைகளும் ஆரம்பித்துவிட்டன. இரண்டு படங்களுமே வெல்லுமா இல்லை ஒரு படம் மட்டுமே வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா மலேசியாவில் வரும் 27ஆம் தேதி நடக்கிறது.

புதிய அறிவிப்பு: இந்நிலையில் படக்குழு புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி வட இந்தியாவுக்கான தியேட்டர் உரிமத்தை ஜீ ஸ்டூடியோஸ் வாங்கியிருப்பதாக போஸ்டரோடு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த போஸ்டரில் பாபி தியோலும் போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ இப்போஸ்டரை வைத்து பார்த்தால் இது பகவந்த் கேசரி ரீமேக் மாதிரி தெரியவில்லை என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றார்கள். மேலும், வட இந்தியாவில் ஜீ ஸ்டூடியோஸ் ரிலீஸ் செய்வதால் கண்டிப்பாக தியேட்டர்கள் அதிகம் கிடைக்கும் என்றும்; பாலிவுட் படங்களுக்கே சவால் விடும் அளவுக்கு ரிலீஸ் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X