விஜய்யின் ஜன நாயகன் புதிய ரிலீஸ் தேதி இதுதானா?.. தீயாக பரவும் தகவல்.. தப்பித்த ‘கர’.. ஆனால் கருப்பு?

சென்னை: விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்தை பார்த்து இன்று அல்லது நாளைக்குள் மத்திய சான்றிதழ் வாரியம் தணிக்கை சான்றிதழை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 30ம் தேதியே ஜன நாயகன் படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தொடர்ந்து தாமதப்படுத்தி வருகின்றனர்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தனுஷின் 'கர' படத்தை ஏப்ரல் 30ம் தேதி வெளியிடும் நிலையில், ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி ஜன நாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது.

Vijay s Jana Nayagan New Release date
Photo Credit:

அடுத்ததாக சூர்யாவின் கருப்பு வரும் மே 14ம் தேதி வெளியாகிறது. கடந்த ஆண்டு மே 1ம் தேதி சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வெளியானது. இந்நிலையில், கருப்பு ரிலீஸ் உடன் ஜன நாயகன் மோதுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

உற்சாகத்துடன் விஜய்: அடுத்த வாரம் திங்கட்கிழமை மே 4ம் தேதி தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகும். விஜய்க்கு பெரும்பான்மை கிடைக்கும் என பேச்சுக்கள் கிளம்பி வரும் நிலையில், விஜய் மிகுந்த உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் காணப்படுகிறார். ஆட்சியை அமைப்பாரா? அல்லது ஆட்சி அமைக்க உதவுவாரா? என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் அவரை சுற்றி வரும் நிலையில், இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

ஜன நாயகன் ரிலீஸ் தேதி: விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு மொத்த படமே லீக் ஆகி தயாரிப்பு நிறுவனத்துக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையிலும், இன்னமும் சென்சார் சான்றிதழ் தர மறுப்பது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கூடிய விரைவில் ஜன நாயகன் படத்துக்கு தணிக்கை சான்று கிடைக்கும் என்கின்றனர். மேலும், வரும் மே 7 அல்லது மே 8ம் தேதி ஜன நாயகன் வெளியாகும் என புதிய தேதி ஒன்று சினிமா வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.

கர, கருப்பு பாதிப்பு வராது: ஏப்ரல் 30ம் தேதி தனுஷின் கர படத்துக்கு போட்டியாக ஜன நாயகன் வெளியாக வாய்ப்பே இல்லை என்பது தெரிந்துள்ளது. இந்நிலையில், ரிசல்ட் வந்த உடனே ஜன நாயகன் படம் மே 7 அல்லது 8ம் தேதி வெளியானால், மே 14ம் தேதி வெளியாகவுள்ள சூர்யாவின் கருப்பு படத்துக்கும் பெரிதாக பாதிப்பு ஏற்படாது என்கின்றனர். விஜய்யின் ஜன நாயகன் படம் ஒரு வாரம் ஓடினாலே போதிய வசூல் வந்துவிடும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X