Jana Nayagan: இப்போவே ப்ரீ ரிலீஸ் பிசினஸில் பல கோடிகளை குவிக்குதாம் ஜன நாயகன்.. செய்யாறு பாலு ஷேரிங்ஸ்!

சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ஜனநாயகம் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில், அதன் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் இப்போதே தொடங்கி விட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் பேசி உள்ளார்.

லியோ மற்றும் கோட் என ஒவ்வொரு ஆண்டும் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறார் விஜய். அவருடைய கடைசி படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ள நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு அந்த படத்திற்கு பெரிய பிசினஸ் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேவின் தயாரிப்பு நிறுவனம் இப்போதே படத்தில் ஓடிடி உரிமத்தை 121 கோடிக்கு அமேசான் பிரைம் நிறுவனத்திடம் விற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Vijay s Jana Nayagan pre release business crosses 370 crores told by Cheyyaru Balu

இந்நிலையில், 370 கோடி ரூபாய் வரை ப்ரீ ரிலீஸ் பிசினஸை விஜய்யின் ஜனநாயகன் படம் நடத்தி இருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.

வாக்கு அரசியல் கதை: சர்க்கார் படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பின் வழியாக உள்ள மற்றும் ஒரு அரசியல் படமாக ஜனநாயகன் திரைப்படம் இருக்கும் என செய்யாறு பாலு கூறியுள்ளார். இந்த படத்தில் விஜய் பேசும் அரசியல் வசனங்கள் மற்றும் பன்ச் டயலாக் எல்லாமே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அவரது கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

370 கோடி ப்ரீ பிசினஸ்: புதிய படங்களின் ரிலீஸ் தேதியை நிர்ணயிக்கும் இடத்தில் ஓடிடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அடுத்த ஆண்டு வெளியாக காத்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி உரிமை 121 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்றும் மேலும், ஒட்டுமொத்தமாக சில ஏரியாக்களில் விநியோகஸ்தர்களுக்கு படத்தை இப்பவே விற்றுவிட்டு 370 கோடி வரை படத்திற்கான ப்ரீ ரிலீஸ் பிசினஸை தயாரிப்பு நிறுவனம் நடத்தி உள்ளதாக கூறியுள்ளார்.

500 கோடி வரை: எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ். பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய ரிலீஸ் பிசினஸ் மற்றும் விரைவில் 500 கோடி தாண்டும் எனக் கூறியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான படங்களிலேயே லியோ திரைப்படம் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்த நிலையில், அதை விட அதிக வசூலை இந்த படம் ஈட்டுவது உறுதி எனக் கூறியுள்ளார் செய்யாறு பாலு.

சன் டிவி தான் வாங்கியிருக்கு: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்காக உருவாக்கப்பட்ட கதையில் தான் விஜய் எச். வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் என்றும் செய்யாறு பாலு கூறியுள்ளார். கண்டிப்பாக இந்த படம் பகவந்த் கேசரி ரீமேக்காக இருக்காது என்றும் விஜய் தன்னுடைய சினிமா ஆயுதத்தை தனது அரசியலுக்காக நிச்சயம் பெரியளவில் பயன்படுத்த காத்திருக்கிறார். அதிலும், சன் டிவி இந்த படத்தை 60 கோடி கொடுத்து வாங்கியுள்ள நிலையில், படத்தை ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டுக்கு டிவியில் போட்டால் அதுவும் தவெக கட்சிக்கு சாதகம் தான் என்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X