பகவந்த் கேசரி ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழு வாங்கியது உண்மை தானா?.. என்னங்க சொல்றீங்க?

சென்னை: பாலகிருஷ்ணா, ஸ்ரீலீலா, காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் ஜன நாயகன் என மேடையில் விடிவி கணேஷ் பேசியது பெரிய சர்ச்சையை கிளப்பியது. ஏகப்பட்ட தகவல்கள் அந்த படத்தின் ரீமேக் என வந்த நிலையில், தற்போது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை பல கோடி கொடுத்து ஜன நாயகன் படக்குழு வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் சினிமாவை விட்டு அடுத்து அரசியலுக்கு செல்லப்போவதை உறுதியாக தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியையும் ஆரம்பித்துள்ளார். 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக வெற்றிப்பெற்று முதலமைச்சர் ஆவேன் என்கிற குறிக்கோளுடன் விஜய் அரசியல் நகர்வுகளை செய்து வருகிறார்.

Vijay s Jana Nayagan team bought rights of Bhagavanth Kesari due to this scene

மேலும், ஜன நாயகன் படம் தான் தனது கடைசி படம் என்று சொல்லி நடித்து வரும் விஜய் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜன நாயகன் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். இந்நிலையில், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ஜன நாயகன் படக்குழு எதற்காக பெற்றது என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.

பகவந்த் கேசரி ரீமேக்கா?: விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் கன்னட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரிப்பில் ஜனநாயகன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் தான் என்றும் பாலய்யா போல விஜய் கடா மீசை வைத்திருக்கிறார். அவரது உடல் பருமனாக மாறியுள்ளது என ஏகப்பட்ட டீகோடிங்கை ரசிகர்கள் படம் தொடங்கியதில் இருந்தே பார்த்து வருகின்றனர். இந்நிலையில், பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழு வாங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

ஒரே ஒரு சீனுக்காக?: பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் உரிமையை ஜனநாயகன் படக்குழுவினர் சுமார் 4.5 கோடி கொடுத்து வாங்கியுள்ளனர் என்றும் அந்த படத்தில் இடம்பெறும் 'குட் டச், பேட் டச்' காட்சியை மீண்டும் உருவாக்கிய நிலையில், தான் மொத்த படத்தின் உரிமையை வாங்கியுள்ளனர் என்கின்றனர். மற்றபடி இந்த படமும் பகவந்த் கேசரி படமும் அதிகாரப்பூர்வ ரீமேக் இல்லை என்றே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பராசக்தி திட்டமிட்டபடி மோதுமா?: சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா
கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் ஜன நாயகன் படத்துக்குப் போட்டியாக பராசக்தி படத்தை ரிலீஸ் செய்ய ஆகாஷ் பாஸ்கரன் திட்டமிட்ட நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை காரணமாக பராசக்தி மற்றும் இட்லி கடை படங்களின் ரிலீஸ் தேதி தாமதமாக வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர்.

வெற்றி கிடைக்குமா?: ஜன நாயகன் படத்தில் ஏகப்பட்ட அரசியல் நெடி ஓவர்டோஸாக இருக்கும் என்றும் ரசிகர்களை கவரும் விதமாக என்டர்டெயின் படமாக இல்லாமல் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காகவே இருந்தால் படம் வெற்றி பெறுவது ரொம்பவே கஷ்டம் என்கின்றனர். பகவந்த் கேசரி படத்திலும் பாலகிருஷ்ணா ஃபிளாஷ்பேக்கில் போலீஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X