Vijay: சாட்டிலைட், தியேட்டரிக்கல் என அடுத்தடுத்து ஜன நாயகன் வியாபாரத்தில் சிக்கல்.. விஜய்க்கு செக்?
சென்னை: தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகளும், பிரச்சனைகளும், பஞ்சாயத்துகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் சரியான தேதியில் படம் வெளியாகுமா? என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி என்றும் கூறுகின்றனர். அப்படி எல்லாம் எந்த பிரச்சனையும் வந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் கேவிஎன் நிறுவனம் ரோமியோ பிக்சர்ஸ் ராகுலிடம் படத்தின் தியேட்டரிக்கல் உரிமத்தை விலை பேசியதாக தகவல்கள் கசிந்தன.
ஆனால், தற்போது விஜய்யின் ஜன நாயகன் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ராகுல் வாங்கவில்லை என்றும் அவருக்கு பதில் வேறு சிலர் அதை வாங்க போட்டிப் போட்டு வருவதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சன் டிவி சாட்டிலைட் உரிமத்தை வாங்கவில்லை என்றும் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்க்கு செக்: திமுகவை எதிர்த்து தொடர்ந்து அரசியல் களத்தில் விஜய் முழங்கி வரும் நிலையில், அவரது கடைசி படமான ஜன நாயகன் படத்திற்கு ஆளுங்கட்சி தரப்பில் இருந்து பயங்கரமான அழுத்தம் வரும் என எதிர்பார்க்கப்பட்டதை போல ஏகப்பட்ட சிக்கல்கள் கிளம்பி உள்ளதாக கோடம்பாக்கத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. பராசக்தி படத்தை பொங்கலுக்கு போட்டியாக வெளியிட்டுள்ள நிலையில், சாட்டிலைட் உரிமம், தியேட்டரிக்கல் உரிமம் என ஏகப்பட்ட செக்மேட்கள் விஜய்க்கு எதிராக வைக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
ராகுல் வாங்கல?: ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தான் ஜன நாயகன் தியேட்டரிக்கல் உரிமத்தை பல கோடிக்கு வாங்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், சன் டிவியில் சாட்டிலைட் உரிமம் விற்பனை செய்யப்பட உள்ளதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், சமீப காலமாக சன் டிவி உள்ளிட்ட சன் நெட்வொர்க் மற்றும் கலைஞர் டிவிகளில் விஜய் பாடல்கள் கூட ஒளிபரப்பப்படவில்லை என்றும் உதயநிதிக்கு வேண்டப்பட்ட ராகுல் ஜன நாயகன் படத்தை வாங்கவில்லை என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.
வியாபாரத்தில் சிக்கல்: பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் படத்தை வாங்க மற்ற விநியோகஸ்தர்கள் முன் வந்தாலும், பெரிய நிறுவனமாக ஒரே நிறுவனம் வாங்க முன் வராமல் பல சிறிய சிறிய விநியோகஸ்தர்கள் ஏரியா வைஸ் கேட்க, கேவிஎன் நிறுவனம் என்ன செய்வதென்றே தெரியாமல் காத்திருப்பதாக கூறுகின்ற்னர். விரைவில் இந்த வியாபார சிக்கல் தீர்ந்தால் தான் ஜன நாயகன் பஞ்சாயத்து இல்லாமல் வெளியாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











