Leo LCU: அப்போ லியோ எல்சியூ தானா.. கடைசி நேரம் வரை ரகசியம் காத்த லோகேஷ்.. இப்படி லீக் ஆகிடுச்சே?
சென்னை: மாநகரம் படத்திற்கு பிறகு கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் மூலம் தனது எல்சியூ கான்செப்ட்டை கொண்டு வந்து தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
ஹாலிவுட் படங்களில் வருவது போன்ற சினிமாட்டிக் யூனிவர்ஸ் கான்செப்ட்டில் விக்ரம் வெளியான நிலையில், வசூலிலும் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.

லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய்யை வைத்து இயக்கப்போகிறார் என தகவல் வந்ததில் இருந்தே இந்த படம் எல்சியூவா? இல்லையா? என்பது தான். இந்நிலையில், வெளிநாட்டில் லியோ எல்சியூ படம் தான் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
ஆடியோ லான்ச் நடந்திருக்கணும்: செப்டம்பர் 30ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடந்திருக்க வேண்டிய சூழலில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தான நிலையில், விஜய் ரசிகர்கள் இந்த தினத்தையே துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர். ரசிகர்களுக்காக சீக்கிரமே விஜய் லியோ படக்குழுவினருடன் பேட்டி அல்லது டிரெய்லரை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரமில் வந்த கைதி: ஒரு சினிமாவில் இடம்பெறும் நடிகர்கள் இன்னொரு சினிமாவிலும் இடம்பெற்றால் அது சினிமாட்டிக் யூனிவர்ஸ் எனக் கூறுகின்றனர். கைதி படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், கோஸ்ட் என சொல்லப்படும் கமல், கைதி படத்தின் நாயகனாக டெல்லியின் மகள் மற்றும் டெல்லியின் குரல் என அத்தனையும் விக்ரம் படத்தில் இடம்பெற்ற நிலையில், கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்கள் சினிமாட்டிக் யூனிவர்ஸ் படங்களாக மாறின. மேலும், கமல் நடித்த பழைய விக்ரம் படத்தையும் போட்டோக்கள் மூலமாக ஒருங்கிணைத்து இருந்தனர்.
லியோவும் எல்சியூவா?: லியோ படம் எல்சியூவா இல்லையா? என்கிற கேள்வி கடைசி வரை ரகசியமாக இருக்கும் நிலையில், லியோ எல்சியூ தான் என மலேசியாவில் படத்தை வெளியிடும் சில தியேட்டர்கள் தங்கள் சைட்டில் லியோ நடிகர்கள் பட்டியலில் கமல், சூர்யா, பகத் ஃபாசில் உள்ளிட்டோரின் பெயர்களை இடம்பெறச் செய்துள்ளனர்.

நம்பாத ரசிகர்கள்: ஆனால், அது வெறுமனே கூகுள் செய்து லியோ நடிகர்கள் என அந்த தியேட்டர் ஓனர்கள் போட்டிருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக லோகேஷ் தரப்பில் இருந்து சொன்னால் தான் நம்புவோம் என ரசிகர்கள் கடைசி வரை லியோ ஸ்டாண்ட் அலோன் படமாகவே வரும் என எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











