ஜெயிலர் வசூலா?.. வாரிசு வசூல் கூட லியோவுக்கு வராது போல.. நாலா பக்கமும் விஜய்க்கு வைத்த செக்மேட்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் சோலோ ரிலீஸ் ஆன நிலையில், மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. ஜெயிலர் திரைப்படத்துக்கு தெலுங்கில் போட்டியாக வந்த போலா சங்கர் திரைப்படம் மிகப்பெரிய டிசாஸ்டர் படமாக மாறியது மற்றும் தென்னிந்திய நடிகர்களான சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் உள்ளிட்டவர்களின் கேமியோ படத்தின் வசூலுக்கு பெரிதும் கைகொடுத்தது.

ஆனால், ஜெயிலர் படத்தின் வசூலை நடிகர் விஜய்யின் லியோ படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அக்டோபர் 19ம் தேதி பலமுனை தாக்குதல்களை தளபதி விஜய் சந்திக்க நேரிடும் நிலை உருவாகி உள்ளது.

ஜெயிலர் படத்தின் வசூலை விஜய்யின் லியோ முந்தி தமிழ் சினிமாவின் அடுத்த இண்டஸ்ட்ரி படமாக மாறுமா என்பதே தற்போது சந்தேகமாக இருக்கிறது என சில விஜய் ரசிகர்களே பயத்தில் உள்ளனர்.

Vijays Leo Box Office is in big trouble due to Three big release in South Indian Cinema

சிவராஜ்குமாரின் கோஸ்ட் ரிலீஸ்: விஜய்யின் லியோ படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள அக்டோபர் 19ம் தேதி கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கோஸ்ட் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியாகிறது. ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் கேமியோ ரோல் செய்த சம்பவம் காரணமாக கோலிவுட் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகிலேயே சிவராஜ்குமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் அதிகரித்து இருப்பது லியோ படத்துக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளது.

Vijays Leo Box Office is in big trouble due to Three big release in South Indian Cinema

பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி: நல்ல வேளை ஜெயிலர் படத்தில் நெல்சன் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்கவில்லை. ஆனாலும், லியோ படத்துக்கு வில்லனாக மாறிவிட்டார் தெலுங்கு சினிமாவின் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ பாலகிருஷ்ணா. அவர் நடிப்பில் உருவாகி உள்ள பகவந்த் கேசரி திரைப்படமும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

Vijays Leo Box Office is in big trouble due to Three big release in South Indian Cinema

ரவிதேஜாவின் டைகர் நாகேஷ்வர ராவ்: தெலுங்கில் மேலும், ரவிதேஜா நடிப்பில் மிரட்டலாக உருவாகி உள்ள டைகர் நாகேஷ்வர ராவ் திரைப்படம் அக்டோபர் 20ம் தேதி வெளியாகிறது. இந்த படங்களை தவிர ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து தமிழிலும் சில படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தி மற்றும் மலையாளத்தில் படங்கள் வெளியானால் லியோ படத்தின் வசூல் பெருமளவில் பாதிப்பை சந்திக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன.

Vijays Leo Box Office is in big trouble due to Three big release in South Indian Cinema

செக்மேட்டை முறியடிக்குமா லியோ: ஓவர்சீஸ் வசூலுக்கும் பாலய்யா மற்றும் சிவராஜ்குமாரால் பெரிய தொல்லை இருக்கும் என தெரிகிறது. இப்படி செம செக்மேட் நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அதை அனைத்தையும் முறியடித்து விட்டு பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இண்டஸ்ட்ரி ஹிட் படைப்பாரா விஜய் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X