Leo: இது லியோ இல்லை.. மியோவ்.. காலையிலேயே ஏழரையை கிளப்பிய பிரபல விமர்சகர்கள். அவ்ளோதானா?
சென்னை: லியோ படத்தின் முதல் பாதி சூப்பர் என விமர்சனங்கள் குவிந்த நிலையில், இரண்டாம் பாதியில் லோகேஷ் கனகராஜ் மீண்டும் விஜய் அண்ணாவை மாஸ்டர் படத்தை விட மோசமாக வைத்து செய்து விட்டார் என நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
நடிகர் அஜித்தின் தீவிர ரசிகரும், விஜய்யின் தீவிர ஹேட்டருமான மனோபாலா விஜயபாலன் இது லியோ படம் இல்லை மியோவ் என தனது விமர்சனத்தை கொடுத்து விஜய் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளார்.

லியோ படத்தின் முதல் பாதி இருந்த அளவுக்கு அந்த படத்தின் இரண்டாம் பாதி இல்லை என்றும் எந்த பக்கத்திலும் நல்ல ரிசல்ட் வரவில்லை என வலைப்பேச்சு அந்தணன், செய்யாறு பாலு உள்ளிட்ட பலர் நெகட்டிவ் விமர்சனங்களை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
செகண்ட் ஹாஃப் ஓகே: லியோ திரைப்படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் இரண்டாம் பாதி ஓகே ரகம் தான் என கிறிஸ்டோபர் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இரண்டாம் பாதி நல்லா இல்லை: முதல் பாதி இருந்த அளவுக்கு இரண்டாம் பாதியை லோகேஷ் கனகராஜ் செய்திருந்தால், லியோ திரைப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். இப்போதும் வசூலை வாரி குவிக்கும் என இந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.
இது லியோ இல்லை மியாவ்: மனோபாலா விஜயபாலன், சிங்கம் போல ஆக வேண்டும் என விஜய் நினைத்தாலும், லியோ படம் மியோவ் என பூனை போலத்தான் இருக்கு என கடுமையாக விமர்சித்து 2 ஸ்டார் ரேட்டிங்கை மட்டும் கொடுத்துள்ளார்.

நல்ல சேதி இல்லை: நாலா தேசத்திலும் நல்ல செய்தி வரவில்லை என வலைப்பேச்சு அந்தணனும் லியோ படத்திற்கு நெகட்டிவ் விமர்சனத்தை போட்டுத் தாக்கி உள்ளார்.

படம் வொர்த் இல்லை: விஜய் ரசிகர்களே லியோ படத்துக்கு வெறும் 3.25 ஸ்டார்கள் தான் கொடுத்துள்ளனர். எல்சியூ கனெக்ட்டும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு பெரிதாக கேமியோ இல்லாமல் போன நிலையில், இரண்டாம் பாதி லியோ கர்ஜிக்காமல் காலை வாரி விட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











