Leo movie: முதல் நாளில் லியோ படம் எவ்வளவு வசூல் செய்யும்.. அட இவ்வளவு கோடியா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் சர்வதேச அளவில் மிகச்சிறப்பான வகையில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது.

உலகளவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் ரிலீசாகியுள்ள லியோ படத்தில் சில கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக விஜய் ரசிகர்களை படம் மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

விஜய் படங்களில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் காமெடி, ரொமான்ஸ் உள்ளிட்டவை இந்தப் படத்தில் அதிகளவில் மிஸ்ஸிங் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

Vijays Leo movie early box office collection reports says the movie will collect Rs 145 globally in day 1

லியோ படம் முதல் நாளில் செய்யும் வசூல் குறித்த கணிப்புகள்: நடிகர் விஜய்யின் லியோ படம் அவரது 67வது படமாக இன்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. லோகேஷ் -விஜய் கூட்டணியில் வெளியாகியுள்ள இந்தப் படத்திற்கு முன்னதாக சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவில் வரவேற்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்துது. படம் குறித்த சில கலவையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் படம் ஒட்டுமொத்தமாக ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி ரசிகர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படம் உலகளவில் ரசிகர்களிடையே ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில் படத்தின் ப்ரமோஷன்களும் மிகச்சிறப்பான வகையில் செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக இயக்குநர் லோகேஷின் அடுத்தடுத்த ப்ரமோஷன்கள் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்திருந்தது. முன்னதாக கடந்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், படக்குழுவினரின் இந்த பிரமோஷன்கள் மிகப்பெரிய வலிமையை படத்திற்கு கொடுத்திருந்தது.

இந்நிலையில் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய இனிப்பாக லியோ படம் இன்றைய தினம் வெளியாகியுள்ளது. உலகளவில் ஏராளமான ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு தங்களது உணர்ச்சிகளை வார்த்தைகளாக சொல்ல முடியாமல் தவித்ததையும் பார்க்க முடிந்தது. அப்பா -அம்மா இல்லாத விஜய் ரசிகர், இந்தப் படத்தின் ரிலீசையொட்டி தன்னுடைய திருமணத்தை செய்துக் கொண்ட நெகிழ்ச்சியான சம்பவத்தையும் பார்க்க முடிந்தது.

லியோ படம் ரிலீசுக்கு முன்னதாகவே மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது. இதனால் படத்தின் வெளியீட்டிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் தடைகளை தாண்டி இன்றைய தினம் திரையரங்குகளில் லியோ படம் ரிலீசாகியுள்ளது. முன்னதாக படத்தின் டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றில் 46.36 கோடி ரூபாய்களை இந்தப் படம் ரிலீசுக்கு முன்னதாகவே வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக வெளியான ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் முதல் நாளில் 44.5 கோடி ரூபாய்களை வசூலித்திருந்தது.

Vijays Leo movie early box office collection reports says the movie will collect Rs 145 globally in day 1

இந்நிலையில், ரிலீசுக்கு முன்னதாகவே விஜய்யின் லியோ படம், ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிகமாக முதல் நாள் வசூலை எட்டிய படமாக லியோ முன்னதாகவே சாதனை படைத்துள்ளது. இந்தப் படம் முதல் நாளிலேயே 145 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டும் என்று இந்திய அளவில் படங்களின் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் தகவல்களை வெளியிட்டுவரும் Sacnilk Entertainment நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மட்டுமே இன்றைய தினம் இந்தப்படம் 68 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டும் என்றும் சர்வதேச அளவில் 145 கோடி ரூபாய் கலெக்ஷனை முதல் நாளான இன்று இந்தப் படம் பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் ஓடிடி பிரச்சினை காரணமாக வட இந்தியாவின் மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலை காணப்படுவதால், படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vijays Leo movie early box office collection reports says the movie will collect Rs 145 globally in day 1

லியோ படம் இன்றைய தினம் ஹவுஸ்புல் காட்சிகளாக சர்வதேச அளவில் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில் முதல் நாளான இன்று தமிழகத்தில் மட்டுமே 32 கோடி ரூபாய்களையும், கேரளாவில் 12.50 கோடிகளையும், கர்நாடகாவில் 14.50 கோடிகளையும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 17 கோடிகளையும் மற்ற இடங்களில் 4 கோடிகளையும் குவிக்கும் என்று Sacnilk கணித்துள்ளது. வெளிநாடுகளை கணக்கில் கொண்டால் அமெரிக்காவில் மட்டும் 12.5 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் குவிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X