Leo in OTT: ஆங்கிலத்தில் வெளியாகும் விஜய்யின் லியோ.. எப்ப எங்கன்னு பாக்கலாங்களா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது.

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது.

Vijays Leo Movie in English Language to be Streamed in Netflix OTT Platform

விஜய் -லோகேஷ் கூட்டணி: மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான படம் லியோ. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக வெளியானது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். படம் சில தினங்களிலேயே 600 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டது. விஜய்யின் படங்களில் அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்ற பெருமை லியோவிற்கு கிடைத்துள்ளது.

தமிழில் 3வது அதிக வசூல் படம்: தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களின் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்த படம் என்ற பெருமையும் லியோ படத்திற்கு கிடைத்தது. முன்னதாக ரஜினியின் 2.O படம் 700 கோடிக்கும் அதிகமான வசூலை பிடித்த நிலையில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் படம் 650 கோடி ரூபாய் வசூலுடன் 2வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது விஜய்யின் லியோ படம் 3வது இடத்தில் உள்ளது.

கேங்ஸ்டராக கலக்கிய விஜய்: இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார் விஜய். படத்தின் பாடல்களும் அனிருத் இசையில் மாஸ் காட்டியது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெட் பிளிக்சில் இந்தப் படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்தப் படம் மற்ற மொழிகளிலும் சப் டைட்டிலுடன் வெளியாகி ரசிகர்களை கவரவுள்ளது.

ஆங்கிலத்தில் வெளியாகும் லியோ: இந்நிலையில் இந்தப் படம் மீண்டும் வரும் 21ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. படத்தை ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட நெட்பிளிக்ஸ் திட்டமிட்டுள்ளது. ஆங்கில சப் டைட்டிலில் மட்டுமில்லாமல் ஆங்கில மொழியிலேயே படம் வெளியாவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதன்மூலம் இந்த பதிப்பில் ஆங்கிலம் பேசும் விஜய்யை காணலாம். அவருக்கு யார் டப்பிங் கொடுப்பார்கள், அவரது உச்சரிப்பு எப்படி இருக்கும் என்பதை அறிய தற்போது ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தளபதி 68 படம்: இந்தப் படத்தை வாங்கும்போதே இதற்கான ஒப்பந்தத்தில் தயாரிப்புத்தரப்பு கையெழுத்திட்டு அதன்பின்பே மிகப்பெரிய வியாபாரத்தில் நெட்பிளிக்ஸ் இந்தப் படத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்தை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தலைவர் 68 படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் டைட்டில் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் விஜய் ஹீரோவாகி 31 ஆண்டுகள் நிறைவையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Actor Vijay's Leo movie to be streaming in OTT in english language : விஜய்யின் லியோ படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படம் மூலம் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்து மாஸ் காட்டியுள்ளது. இந்தப் படம் சர்வதேச அளவில் 600 கோடிகளை அள்ளியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் ஓடிடியில் வெளியான நிலையில் மீண்டும் வரும் 21ம் தேதி ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X