Lalith kumar: தமிழ்நாட்டுல தான் லியோ இசை வெளியீடு நடக்கும்.. லலித்குமார் உறுதி!
சென்னை: நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் லியோ. அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தில் மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜூன் உள்ளிட்டவர்களும் மிரட்டலான கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரமோஷன்களும் சிறப்பான வகையில் திட்டமிடப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டுல தான் லியோ இசை வெளியீடு நடக்கும் என லலித்குமார் உறுதி: வாரிசு படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்தப்படமாக லியோ உருவாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை மற்றும் தலக்கோணம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற நிலையில், படத்தின் சூட்டிங் தற்போது நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
லியோ படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொண்டு தற்போது நார்வேயில் தன்னுடைய விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ளார் விஜய். படத்தின் இசை வெளியீடு அடுத்த மாதம் 5ம் தேதி துபாயில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த நிகழ்ச்சியில் விஜய்யை எதிர்பார்க்கலாம். முன்னதாக லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற தளபதி 68 லுக் டெஸ்ட்டிற்கும் அவர் நேரடியாக நார்வேயில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தொடர்ந்து படம் குறித்த பல விஷயங்களை அப்டேட் செய்து வருகிறார். இந்நிலையில் மகாராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் லாஞ்சில் பேசிய லலித்குமார், லியோ படத்தின் முதல்பகுதியை தான் பார்த்ததாகவும் படத்தின் இந்த பகுதி சிறப்பாக வந்துள்ளதாக தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் கூறியதாகவும் தொடர்ந்து எடிட்டர் பிலோமின் ராஜ் மிகச்சிறப்பான வகையில் செயல்பட்டுள்ளதாகவும் பாராட்டியதாக தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட லோகேஷ் கனகராஜ், இந்தப் படத்திற்காக தான் அதிகமான மெனக்கெடலுடன் வேலை செய்து வரும்நிலையில் பிலோமின் ராஜை பாராட்டுகிறீர்களே என தன்னிடம் கேட்டதாகவும் லலித்குமார் மேலும் கூறியுள்ளார். லியோ படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் அடுத்த வாரத்திலிருந்து வெளியாகி ரிலீஸ் வரைக்கும் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படும் நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்து லலித்குமார் பேசியுள்ளது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
படத்தை இன்னும் விஜய் பார்க்கவில்லை என்றும் தான் மட்டுமே படத்தின் முதல் பாதியை பார்த்துள்ளதாகவும் லலித்குமார் மேலும் கூறியுள்ளார். மேலும் படத்தின் இசை வெளியீடு தமிழ்நாட்டில்தான் நடக்கும் என்றும் இன்னும் இடம் முடிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி 68 படத்தில் இணையவுள்ளார் விஜய். இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபர் 1ம் தேதி பூஜையுடன் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரியங்கா மோகன், பிரஷாந்த், பிரபுதேவா உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications