Leo: வித்தியாசமான ப்ரமோஷன்களை முன்னெடுக்கும் லியோ டீம்.. ட்ரெண்டாகும் லியோ காய்ன்!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் ரிலீசாக இன்னும் 37 நாட்கள் மட்டுமே உள்ளதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தொடர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் படத்தின் ஆரம்பத்திலிருந்தே சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன்கள் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளன.

Vijays Leo movie team planned for varios promotions for the movie

வித்தியாசமான ப்ரமோஷன்களை முன்னெடுக்கும் லியோ டீம்: நடிகர் விஜய்யின் வாரிசு படம் குடும்ப சென்டிமெண்ட் கதைக்களத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. அஜித்தின் துணிவு படத்துடன் கடந்த ஜனவரியில் பொங்கல் ரிலீசாக வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தின் வரவேற்பிற்கு அதிகமான காரணங்கள் காணப்படுகின்றன.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லியோ படத்தில் விஜய் -லோகேஷ் கூட்டணி அமைந்துள்ளது. முன்னதாக பேட்டியொன்றில் தனக்கும் விஜய்க்கும் அதிகமான புரிதல் ஏற்பட்டுள்ளதால் லியோ படம் 100 சதவிகிதம் தன்னுடைய ஸ்டைலில் இருக்கும் என்று லோகேஷ் தெரிவித்திருந்தார். அந்த வகையில் இந்தப் படத்தில் கேங்ஸ்டராக நடிகர் விஜய் நடித்துள்ளார். பார்த்திபன் மற்றும் லியோ என இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார். இந்த கேரக்டர்களுக்கு அதிகமான வித்தியாசத்தை காட்டும் வகையில் அவரது கெட்டப் அமைந்துள்ளது.

படத்தின் துவக்கம் முதலே ஒருபகுதியில் படத்தின் ப்ரமோஷனும் தொடர்ந்து வந்தது. படத்தின் டைட்டில் டீசர் வெளியான நிலையில், அதில் ஸ்டைலான விஜய்யை பார்க்க முடிந்தது. ப்ளடி ஸ்வீட் என்ற டேக் இந்தப் படத்திற்கான அட்ராக்ஷனை அதிகப்படுத்தியது. தொடர்ந்து காஷ்மீரில் கடுமையான குளிர், நிலநடுக்கத்திற்கிடையில் 52 நாட்கள் படத்தின் சூட்டிங் நடந்த நிலையில், அவ்வப்போது த்ரிஷா, விஜய் மற்றும் படக்குழுவினரின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

இந்த சூட்டிங் நிறைவையொட்டி, சூட்டிங்கின் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் விஜய்யின் பைட்டிங் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் பிறந்தநாட்களையொட்டி வெளியான போஸ்டர்கள், ஃபர்ஸ்ட் சிங்கிள், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் ரசிகர்களை கவரும்வகையில் மாஸாக அமைந்தது. இதில் நா ரெடி பாடல் மற்றும் அர்ஜூனின் கிளிம்ப்ஸ் வீடியோ தொடர்ந்து அதிகமான லைக்ஸ்களை யூடியூபில் பெற்றது.

படத்தின் ரிலீசுக்கு இன்னும் 37 நாட்கள் மட்டுமே இருப்பதாக ரசிகர்கள் நாட்களை எண்ணி வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் அனிருத் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவான் ரிலீசின்போது கூறியிருந்தார். அந்த வகையில் வரும் 17ம் தேதி விஜய் -த்ரிஷா காம்பினேஷனில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijays Leo movie team planned for varios promotions for the movie

படத்தில் மொத்தமே 2 பாடல்கள்தான் உள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த வாரத்திலிருந்து படத்தின் ரிலீஸ் வரையில் அடுத்தடுத்த லியோ படத்தின் சிறப்பான அப்டேட்களை தொடர்ந்து எதிர்பார்க்கலாம் என்று படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதனிடையே, படத்தின் பிரமோஷனை மேலும் அதிகரிக்கும் வகையில் லியோ காயினை தற்போது படக்குழுவினர் வெளியிட உள்ளனர். இந்த காயின் விற்பனை செய்யப்படுமா அல்லது ரசிகர்களுக்கு ரிலீசின்போது கொடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான ரஜினியின் ஜெயிலர் படம் 700 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் லியோ படத்தின் வசூலை 1000 கோடி ரூபாயாக தயாரிப்பு தரப்பு நிர்ணயித்துள்ளது. அதனால் படம் எந்த இடத்திலெல்லாம் குறைவாக இருக்கிறது என்பதை பார்த்து, அந்த இடங்களை சரியாக நிரப்பு படக்குழுவினர் தற்போது பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X