தோ வந்துடும்.. தோ வந்துடும்னு சொன்னாங்க.. 1300 லியோ டான்ஸருக்கு சம்பளமே இன்னும் வரலையாம்!

சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றால் அந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடத்துக்கு வெளியே போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த "நா ரெடி தான்" பாடலில் நடனமாடிய 1300 பேர் தங்களுக்கு இன்னும் சம்பளமே வரவில்லை என தவியாய் தவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் தானாகவே உருவாகி வருகிறதா அல்லது படக்குழுவினர் செய்யும் செயலால் உருவாகி வருகிறதா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

200 கோடி சம்பளம் வாங்கும் விஜய்: நடிகர் விஜய் ஒரு படத்துக்கு அதிகபட்சமாக சம்பளமாக 200 கோடி ரூபாய் வாங்குகிறார் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், அவருடன் நடனமாடிய கலைஞர்கள் தங்களுக்கு நான்கு மாதங்கள் ஆகியும் இன்னமும் சம்பளம் வரவில்லை எனத் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.

லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான நான் ரெடிதான் பாடல் அனிருத் இசையில் விஜய் பாடிய பாடலாக உருவாகியிருந்தது. அந்தப் பாடலில் சுமார் 2000 பேர் நடனம் ஆடியதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்தப் பாடலுக்கு நடனமாடிய சுமார் 1300 பேருக்கு சம்பள பாக்கி இன்னும் தரவில்லை என்கிற குற்றச்சாட்டை நடனக் கலைஞர்கள் முன்வைத்துள்ளனர்.

1300 பேருக்கு சம்பள பாக்கி: லியோ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனர் லலித் குமார் தயாரித்துள்ள நிலையில், காஷ்மீர் செட்டியூல் முடிந்து வெளியிடப்பட்ட வீடியோவில் ப்ரொடக்ஷன் பாய் முதல் லைட்மேன் எல்லாம் ஒட்டு மொத்த படக்குழுவினரும் பட்ட கஷ்டங்களை காட்டி ப்ரோமோட் செய்திருந்தனர்.

Vijays Leo Naa Ready song dancers raises complaint on didnt get salary for 1300 dancers

ஆனால், தற்போது லியோ படத்தில் விஜயுடன் நடனமாடிய அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை என்கிற ஷாக்கிங் தகவல்கள் அந்த படத்திற்கு எதிராக பெரிய சிக்கலாக மாறி உள்ளது.

ரிலீஸுக்கு முன் கிடைக்குமா?: 8 நாட்கள் சூட்டிங் என சொல்லப்பட்டு தலா ஒருவருக்கு 20,000 வரை சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் ஆனால் ஆறு நாட்களில் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், 16,000 சம்பளத்தை பெறுவதற்காக நாங்கள் 1300 பேரும் கடந்த நான்கு மாதங்களாக போராடி வருகிறோம். தோ வந்துரும் தோ வந்துருமென 4 மாதங்களை ஒட்டி விட்டனர். லியோ படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக எங்களுக்கு சம்பளம் கிடைத்தால் கூட பெரும் உதவியாக இருக்கும் என பாதிக்கப்பட்ட நடனக் கலைஞர்கள் பேட்டி அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X