காக்கா - கழுகு சண்டையெல்லாம் விடுங்க.. லியோ படத்துல கழுகு பட கதையே ஓடுது கவனிச்சீங்களா?

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தில் கழுகு படத்தின் கதையை இரண்டாம் பாதியில் லியோ தாஸ் கதாபாத்திரத்தை காட்டும் போது லோகேஷ் கனகராஜ் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தில் சொருகி இருப்பதை கவனிச்சீங்களா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

"நா ரெடி தான்" என விஜய் பாடிய பாடலை விட கடைசியில் வரும் ரஜினிகாந்தின் "நான் பொல்லாதவன்" பாடலுக்குத் தான் தியேட்டரே தெறிக்குது.

Vijays Leo second half story is Rajinikanths Kazhugu movie story troll trending

சஞ்சய் தத்தை கேஜிஎஃப் 2 படத்தில் வைக்கிங்காக காட்டிய நிலையில், லியோ படத்தில் கழுகு பட வில்லனாக மாற்றிவிட்டாரே லோகேஷ் கனகராஜ் என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

ஏகப்பட்ட பிரச்சனை: லியோ படத்தில் ஆரம்பம் நல்லா சூப்பராக ஆரம்பித்தாலும், படத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அடுக்கடுக்காக இடம்பெற்றிருப்பதை ரசிகர்களாலே மறுக்க முடியாத விஷயம் தான். மாஸ்டர் படத்திலாவது கிளைமேக்ஸ் காட்சியில் அந்த வில்லு விட்டு லாரிகளை கவிழ்க்கும் சீன் மட்டும் தான் நெகட்டிவாக பேசப்பட்டது. ஆனால், அதே போல இதிலும் ஒரு சீன் இருக்கு, அந்த சீனில் ஸ்கோர் செய்தாலும், ஒட்டுமொத்தமாக இரண்டாம் பாதியில் ரைட்டப்பில் லோகேஷ் கனகராஜ் கோட்டை விட்டாரா? அல்லது கொட்டாவி விட்டுட்டு ரத்னகுமாரிடம் கொடுத்து விட்டாரா? என்று தான் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கழுகு பட கதை: ரஜினிகாந்த் நடித்த கழுகு படத்தில் எப்படி வில்லன் நரபலி கொடுப்பதும், அதை சூப்பர்ஸ்டார் தடுப்பதும் கதையாக இருந்ததோ, அதே கதையை பல வருடங்கள் கழித்து லியோவில் சஞ்சய் தத் மூலமாக லோகேஷ் கனகராஜ் திணித்து விட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் வச்சு செய்து வருகின்றனர்.

ஆனால், கழுகு படமே இப்போது பார்க்கவும் பயமா இருக்கும். லியோ படத்தில் அந்த காட்சிகளை பார்க்கும் போது, அய்யோ போதும்டா சாமி என்று தான் எண்ணத் தோன்றுகிறது என சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் வஞ்சத்தை தீர்த்து வருகின்றனர். ரஜினி ரெஃபரன்ஸ் வச்சும் இரக்கம் இல்லையா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X