2வது வார இறுதியில் மீண்டும் சூடு பிடித்த லியோ டிக்கெட் புக்கிங்.. 600 கோடி வசூலை எட்டுமா?
சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படத்துக்கு முதல் நாள் டிக்கெட்டே கிடைக்காத நிலை ஏற்பட்ட நிலையில், முதல் 6 நாட்களும் மிகப்பெரிய வசூல் வேட்டையை அந்த படம் அடைந்தது.
461 கோடி ரூபாய் வசூலை முதல் வாரத்தில் லியோ பெற்றதாக தயாரிப்பாளர் லலித் குமார் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

லியோ ரிலீஸுக்கு முன்பாக ஏற்பட்ட பிரச்சனைகளை விட லியோ ஜெயிலர் வசூலை முறியடித்து விடக் கூடாது என்பதற்காக எழுந்துள்ள பிரச்சனைகள் தான் அதிகம். இந்நிலையில், இரண்டாவது வாரத்தில் சனிக்கிழமையான நேற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்றும் படத்தின் டிக்கெட் புக்கிங் மீண்டும் சூடு பிடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தியேட்டருக்கு படை எடுக்கும் விஜய் ரசிகர்கள்: நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூலே பொய் என சினிமாவில் பிரபலங்கள் என சொல்லிக் கொண்டு சிலர் யூடியூப்களில் பேட்டி அடித்து சினிமாவுக்கு எதிராக பேசி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் மீண்டும் லியோ படத்தை பார்க்க இரண்டாம் வார இறுதியிலும் ரசிகர்கள் கூட்டம் கூடிவருகிறது.
500 கோடி கிளப்: 461 கோடி ரூபாயை 6 நாட்களில் லியோ திரைப்படம் வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், வார நாட்களில் படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக குறைந்து விட்டது. சனிக்கிழமை நேற்று மீண்டும் தியேட்டர்கள் 50 முதல் 60 சதவீதத்துக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகளாக பல தியேட்டர்களில் இருந்த நிலையில், 500 கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
600 கோடி வசூல் வருமா?: லியோ திரைப்படம் முதல் வாரத்தில் அதிகபட்சமாக 461 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், இரண்டாம் வார முடிவில் 600 கோடி வசூலை எட்டுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், அதிகபட்சமாக 550 கோடி வசூல் தான் லியோவின் லைஃப் டைமாக இருக்கும் என்றும் பெரியளவில் படத்தை புரமோஷன் செய்திருந்தால் 700 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்றும் கூறுகின்றனர்.
வெற்றி விழா: 500 கோடி வசூலை லியோ படம் ஈட்டியுள்ளதாக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை திங்கட்கிழமை தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நவம்பர் 1ம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. காவல் துறை அனுமதியளித்தால் நிகழ்ச்சி கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











