Leo Ticket: ரோகிணி தியேட்டர்ல 2000 ரூபாய்க்கு லியோ பட டிக்கெட் விற்பனையா?.. உண்மை என்ன?
சென்னை: தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள லியோ படத்துக்கு இந்த வாரமே டிக்கெட் புக்கிங்கை பல திரையரங்குகளும் புக் மை ஷோ மற்றும் நேரடி கவுன்ட்டர் டிக்கெட் என ஆரம்பித்து அனல் பறந்து கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் இப்படியிருக்க மற்றொரு பக்கம் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரசிகர்களின் கோட்டை என அழைக்கப்படும் ரோகிணி தியேட்டரில் டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுதொடர்பாக விஜய் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ரேவந்த் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்து விஜய் ரசிகர்களை எச்சரித்துள்ளார்.
ஒரு டிக்கெட் 2000 ரூபாயா?: அதிக விலைக்கு சினிமா டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுவதை தவிர்க்கவே அதிகாலை ரசிகர் மன்ற சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. லியோ படத்துக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர் மன்றம் சார்பாக டிக்கெட் விற்பனை நடைபெறுமா? என்கிற கேள்விகளை தாண்டி ஒரு டிக்கெட் 2000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரிய சிக்கல் ஆகுமா?: ஏ.ஆர். ரஹ்மான் இசை கச்சேரியில் நடைபெற்றதை போலவே தமிழ்நாட்டில் லியோ படம் ரிலீஸ் ஆகும் போது பல தியேட்டர்களில் போலி டிக்கெட்டுகளுடன் ரசிகர்கள் உள்ளே நுழைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. தியேட்டர் நிர்வாகம் டிக்கெட்டுகளை முறையாக பரிசோதனை செய்து விட்டே உள்ளே அனுப்பினால் தான் சரியான டிக்கெட்டுகளை வாங்கிய நபர்கள் நிம்மதியாக படம் பார்க்க முடியும். இல்லை என்றால் இருவர் ஒரு சீட்டுக்கு அடித்துக் கொள்ளும் நிலைமையும் ஏற்படும் என்கிற பீதி கிளம்பி இருக்கிறது.
போலி டிக்கெட் உலவுகிறது: சமீபத்தில் மதுரை பிரியா சினிமாஸ் போலி டிக்கெட்டுகள் குறித்து வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த நிலையில், தற்போது சென்னை ரோகிணி தியேட்டரிலேயே போலி டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற்று வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
ரேவந்த் சரண் பதில்: நேர்மையான முறையில் சரியான டிக்கெட்டுகளை மட்டுமே வாங்கி வந்து படத்தை பாருங்கள், பிளாக்கில் டிக்கெட்டுகள் விற்கிறோம் என்கிற பெயரில் போலி டிக்கெட்டுகளை வாங்கி ஏமாற வேண்டாம் என ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் சரண் கூறியுள்ளார். ரசிகர் மன்றங்களுக்கு டிக்கெட் விற்பனை செய்யாமல் அனைத்தையும் ஆன்லைன் டிக்கெட்டாக விற்பனை செய்தால் இந்த பிரச்சனை வராது என ரேவந்த் சரணுக்கு விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில், லியோ டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டர் சேதமான நிலையில், லியோவுக்காக அவசர அவசரமாக இருக்கைகள் சரி செய்யப்பட்டு ரெடியாகி உள்ளதாக கூறுகின்றனர். முதல் நாள் அன்னைக்கு எத்தனை தியேட்டர் என்ன என்ன பாதிப்புகளை சந்திக்கப் போகிறதோ என்கிற பயம் இருந்தாலும், இதுதான் சம்பாதிக்கும் நேரம் என தியேட்டர்கள் அனைத்திற்கும் தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











