அண்ணன் ரெடி.. கொள்ளை அடி.. லியோ டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனையா?.. பகல் கொள்ளையா இருக்கே!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தின் டிக்கெட்டுகள் கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில திரையரங்குகளில் ரசிகர் மன்ற காட்சிகள் 400 முதல் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் கிளம்பி உள்ளன.

கடைசிவரை லலித்குமார் லியோ படத்துக்கு எந்த ஒரு புரமோஷன் செய்யாத நிலையில், வந்தவரை லாபம் என தியேட்டர்கள் அதிக விலைக்கு லியோ படத்தின் டிக்கெட்டுகளை விற்று வருவதாக புகார்கள் கிளம்பியுள்ளன.

Vijays Leo Tickets sale on extra price makes fans shocks

கூடுதல் விலைக்கு லியோ டிக்கெட்: முன்னணி நடிகர்கள் படங்களின் ரிலீஸ் என்றாலே முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் ரசிகர் மன்ற ஷோக்களாக போடப்பட்டு அதிகபட்சமாக 1000 ரூபாய் 2000 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில், அதை எல்லாம் தடுக்கத்தான் அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

மேலும், கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்ற சில திரையரங்குகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் லியோ படத்தின் ரிலீஸை முன்னிட்டு மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதல் விலைக்கு சில திரையரங்குகளில் டிக்கெட்டுகள் விற்பனை ஆகி வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

400 முதல் 800 ரூபாய்: கோவை மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட்டுகள் ரூபாய் 400 முதல் 800 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்பட்டு வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijays Leo Tickets sale on extra price makes fans shocks

மேலும், கோவை கேஜி சினிமாஸில் டிக்கெட் உடன் சேர்த்து கட்டாயமாக உணவுகளை வாங்க வேண்டும் என 450 விலைக்கு காம்போ டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வருவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன. கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்கும் தியேட்டர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் குவிந்துள்ளன.

பகல் கொள்ளை: இது என்னடா பெரிய பகல் கொள்ளையாய் இருக்கிறதே என ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்தில் விளாசி உள்ளார்.

சென்னையில் இன்னமும் பல திரையரங்குகள் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் டிக்கெட் புக்கிங் அனல் பறந்து வரும் நிலையில், இதுதான் சான்ஸ் என தியேட்டர்கள் ரசிகர்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிக்க கூடாது என்கிற கண்டனங்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X