Leo Trailer - கெட்டவார்த்தை டூ கெட்டப்வரை.. லியோ ட்ரெய்லரை வெளுக்கும் ரசிகர்கள்

சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) லியோ ட்ரெய்லரில் விஜய் கெட்டவார்த்தை பேசியது பெரும் கண்டனத்தை சம்பாதித்திருக்கிறது.

லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் எதிர்பார்த்த ட்ரெய்லர் என்றால் அது இதுதான். லோகேஷ் கனகராஜ் என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கும்; விஜய்யை பார்ப்பதற்கும் ரசிகர்கள் காலை முதலே ஆவலோடு காத்திருந்தனர். சூழல் இப்படி இருக்க ட்ரெய்லரை பார்த்து ரசிகர்கள் உச்சக்கட்ட கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

Vijays Leo Trailer Controversy Over Usage Of Abusive Word

மெகா ஹிட்டுக்கு போஸ்டர் அடி: ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் தனது உச்சக்கட்ட மேஜிக்கை ட்ரெய்லரிலேயே காண்பித்திருக்கிறார் எனில் படத்தில் எப்படி இருக்கும் என மகிழ்ச்சியில் திளைத்துவருகின்றனர். மேலும் விஜய்யை இப்படி ஒரு ஆக்‌ஷனில் பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்றும் சிலாகிக்கின்றனர்.

விமர்சனம்: இப்படி ஒரு பக்கம் ட்ரெய்லருக்கு கொண்டாட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருக்க மறுபக்கம் விமர்சனமும் எழுந்திருக்கிறது. அதாவது இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே விஜய்யின் கெட்டப் ட்ரோலுக்கு உள்ளானது. ட்ரோலுக்கு உள்ளான கெட்டப் ட்ரெய்லரில் வரும் பார்த்தி கெட்டப். விஜய் என்றாலே அழகு. துள்ளாத மனமும் துள்ளும், குஷி, ஷாஜகான், காவலன், நண்பன், வேலாயுதம் என ஏராளமான படங்களில் விஜய்யின் லுக் எப்போதும் கொண்டாடும்படியே இருக்கும். ஆனால் பீஸ்ட்டிலிருந்து விஜய்யின் லுக் அடிவாங்க ஆரம்பித்துவிட்டது என்று அவரது ரசிகர்களே கூற ஆரம்பித்தனர்.

Vijays Leo Trailer Controversy Over Usage Of Abusive Word

அதேசமயம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த மாஸ்டர் படத்திலும்கூட விஜய் ஓரளவுக்கு அழகாகவே தெரிந்தார். எனவே கண்டிப்பாக லியோவில் விஜய்யின் லுக் வேறு மாதிரியாகத்தான் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க ஃபர்ஸ்ட் லுக்கில் பார்த்தி கெட்டப்தான் விடப்பட்டது. அதுவும் விஜய் ரசிகர்களை கொஞ்சம் அப்செட் ஆக்கியது. ஆனால் நா ரெடிதான் பாடலில் வந்த விஜய் (லியோ) லுக்கை பார்த்தபோது விஜய்யின் பார்த்தி கெட்டப்பை ட்ரோல் செய்தவர்களும் வாயடைத்து போயினர்.

நிலைமை இப்படி இருக்க ட்ரெய்லரில் லியோவின் கெட்டப்பை கடைசியாகத்தான் கொண்டு வருகிறார் லோகேஷ். எனவே இதேபோல் லியோ கெட்டப்பை படத்தின் கடைசியில் கொண்டுவந்துவிட்டால் என்ன ஆகும் என்ற அச்சத்தில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

Vijays Leo Trailer Controversy Over Usage Of Abusive Word

கெட்ட வார்த்தை: கெட்டப் பஞ்சாயத்தைவிட கெட்ட வார்த்தை பஞ்சாயத்துதான் லியோ ட்ரெய்லரில் தலைதூக்கியிருக்கிறது. விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செய்துவருகிறார். எம்ஜிஆர், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்ததாக இந்த விஷயத்தை மன்றத்தின் பெயரிலோ இயக்கத்தின் பெயரிலோ செய்வது விஜய் மட்டும்தான். அதன் விளைவாக விஜய்க்கு முன்னதாக சொன்ன இரண்டு பேர் போல் விஜய்யும் அரசியலுக்கு வருவார் என்றே பெரும்பாலானோரால் கூறப்படுகிறது.

ஆனால் எம்ஜிஆரோ, விஜயகாந்த்தோ தங்களுடைய படங்களில் எந்த கெட்ட வார்த்தையும் பேசியதில்லை. அதிலும் அவர்கள் திரைப்படங்களில் பெண்களை ரொம்பவே மதிக்கக்கூடியவர்கள். விஜய்யோ லியோ ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் ஒரு வார்த்தையை எப்படி சொல்லலாம் என்று பேசுகின்றனர் ஒருதரப்பினர்.

Vijays Leo Trailer Controversy Over Usage Of Abusive Word

மேலும் விஜய் ட்ரெய்லரில் சொல்லும் ஒரு வார்த்தை ஆதிக்கம் வாய்ந்த குறிப்பிட்ட சமுதாயத்தால் தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்களை மட்டமாக பார்த்த வரலாறு உண்டு. இதற்காக இதே தமிழ்நாட்டில் பல தலைவர்கள் எதிர்ப்புகளை தெரிவித்திருக்கின்றனர். வரலாறு இப்படி இருக்க தளபதியிலிருந்து தலைவர் நாற்காலிக்கு நகர்த்த துடிக்கும் ரசிகர்களுக்கு இப்படி தவறான வழிகாட்டியாக விஜய் இருக்கலாமா எனவும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X