தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸ் பகவான் விஜய்.. முதல் நாளில் வேறு எந்த நடிகரும் செய்யாத சாதனை படைத்த லியோ!

சென்னை: தென்னிந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் பகவானாகவே நடிகர் விஜய் மாறியுள்ளார். இந்த ஆண்டு வேறு எந்த நடிகரும் செய்ய முடியாத சூப்பரான சாதனையை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் செய்து அசத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கே லியோ திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு வரை தியேட்டர்கள் அனைத்தும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ஓடிக் கொண்டிருந்தன.

Vijays Leo will create a super record in South India at Box Office

வெள்ளிக்கிழமையான இன்று மட்டுமல்ல, அடுத்து சனி, ஞாயிறு, திங்கள் மற்றும் செவ்வாய் ஆயுத பூஜை விடுமுறை என அனைத்து நாட்களுக்கும் டிக்கெட்டுகள் மொத்தமாக பல இடங்களில் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஆல் ஏரியாவிலும் அய்யா கில்லி: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மடோனா சபாஸ்டியன், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை முதல் நாளில் நடத்தி உள்ளது. இந்த ஆண்டு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் கூட இந்த சாதனையை செய்யாத நிலையில், விஜய்யின் லியோ செய்து காட்டியுள்ளது.

கேரளாவில் 10 கோடி வசூல்: ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த சாதனையை முறியடிக்க முடியாமல் போக காரணமே கேரளாவில் அந்த படம் வெறும் 5.5 கோடி வசூலை மட்டுமே எட்டியிருந்தது. அதை தாண்டி மற்ற அனைத்து தென்னிந்திய மாநிலங்களிலும் முதல் நாள் வசூல் ஜெயிலர் மற்றும் லியோ திரைப்படம் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டியுள்ளது.

Vijays Leo will create a super record in South India at Box Office

கர்நாடகாவும் விஜய் கோட்டை: கர்நாடகாவிலும் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் நாள் செய்த வசூலை விட லியோ திரைப்படம் அதிகளவில் வசூல் செய்திருப்பதாகவும் கேஜிஎஃப் 2 படத்திற்கு ஒதுக்கப்பட்டதை விட பெங்களூரில் அதிகபட்ச காட்சிகள் விஜய்யின் லியோவுக்கு கிடைத்த நிலையில், லியோ வேறலெவல் வசூல் வேட்டையை ஆடியிருக்கிறது.

தென்னிந்தியாவில் தாறுமாறு: தென்னிந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் பகவானாகவே விஜய் மாறியுள்ளார் என்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா என அனைத்து இடங்களிலும் 10 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை முதல் நாளில் லியோ நடத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 9 மணிக்கு ஷோ ஆரம்பிக்கப்பட்டே 30 கோடி வசூலை தாண்டியிருப்பதாக கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X